Asianet News TamilAsianet News Tamil

சிலம்பம் சுற்றி அசத்திய அமைச்சர் செஞ்சி மஸ்தான்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

விழுப்புரத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்று சிலம்பம் சுற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விழுப்புரத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்று சிலம்பம் சுற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டையில், மரபு நடை விழா ஜன.7 தொடங்கி ஜன.14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மண்ணின் பெருமைமிகு வரலாறு கூறும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன். இந்த நிகழ்ச்சியில், தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்று தமிழர்களின் பாரம்பரியமான சிலம்பாட்டம் ஆடி காட்டினார். அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிலம்பம் சுற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Video Top Stories