Jan 22, 2025, 1:12 PM IST
இயக்குனர் சுந்தர் சி நாயகனாக நடித்துள்ள படம் வல்லான். இப்படத்தை மணி சேயோன் இயக்கி உள்ளார். இப்படத்தில் தான்யா ஹோப், ஹெபா பட்டேல், அபிராமி வெங்கடாச்சலம், சாந்தினி தமிழரசன், தலைவாசல் விஜய், டிஎஸ்கே என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. விறுவிறுப்பான கிரைம் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் வல்லான் திரைப்படத்தின் அனல்பறக்கும் டிரைலர் வெளியாகி உள்ளது.
வல்லான் திரைப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்து உள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மணி பெருமாள் மேற்கொண்டிருக்கிறார். தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருக்கும் வல்லான் திரைப்படம் வருகிற ஜனவரி 24ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.