யோகிபாபு முதன்முறையாக டபுள் ஆக்‌ஷனில் நடித்துள்ள ‘டக்கர்’ படத்தின் டக்கரான டிரெய்லர் இதோ

May 21, 2023, 12:48 PM IST

சித்தார்த் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் டக்கர். இப்படத்தை கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் சித்தார்த்துக்கு ஜோடியாக திவ்யன்ஷா நடித்துள்ளார். இப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அவர் முதன்முதலில் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் இதுதான். இப்படத்தில் தந்தை மற்றும் மகன் ஆகிய வேடங்களில் நடித்துள்ளார் யோகிபாபு.

டக்கர் திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படம் வருகிற ஜூன் 9-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், தற்போது டக்கர் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதிரடி ஆக்‌ஷன், காமெடி மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் நிறைந்த ஸ்டைலிஷ் திரைப்படம் டக்கர் உருவாகி உள்ளது என்பதை டிரெய்லர் மூலமே காண முடிகிறது.