vuukle one pixel image

கங்காவே அந்த ஆட்டம் ஆடுச்சு.. இப்போ ஒர்ஜினல் பீசே வந்துருக்கு! ஜோதிகாவின் கட்சியோடு 'சந்திரமுகி 2' ட்ரைலர்!

manimegalai a  | Published: Sep 23, 2023, 5:41 PM IST

ரஜினிகாந்தை வைத்து சந்திரமுகி படத்தின் முதல் பாகத்தை இயக்கிய, இயக்குனர் பி.வாசு... சந்திரமுகி 2 படத்தை, நடிகர் லாரன்ஸை ஹீரோவாக வைத்து இயக்கி உள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் ரிலீஸ் தேதி செப்டம்பர் 28 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

இதை தொடர்ந்து தற்போது சந்திரமுகி 2 படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆரம்பத்திலேயே முதல் பாகத்தில் கங்காவாக நடித்த ஜோதிகாவின் காட்சிகளும் இந்த படத்தில் இடம்பெறுகிறது. குறிப்பாக வடிவேலுவின் காமெடி இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம் என்பது ட்ரைலரை பார்க்கும் போதே தெரிகிறது.

அதே போல் கங்கானாவும், ராகவா லாரன்சும் மோதிக்கொள்ளும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. தற்போது வெளியாகியுள்ள 'சந்திரமுகி 2' படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருவதோடு, படம் மீதான ஆர்வத்தையும் தூண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.