டபுள் ஆக்‌ஷனில் மிரட்டும் துல்கர் சல்மான்... சூர்யா வெளியிட்ட ‘கிங் ஆஃப் கோதா’ டிரைலர் இதோ

Aug 10, 2023, 2:09 PM IST

துல்கர் சல்மான் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் கிங் ஆஃப் கோதா. அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ள இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும் டான்சிங் ரோஸ் ஷபீர், அனிகா சுரேந்திரன், பிரசன்னா, நைலா உஷா, செம்பன் வினோத், வட சென்னை சரண், கோகுக் கிருஷ்ணா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் இப்படத்தில் நடிகை ரித்திகா சிங், ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடி இருக்கிறார். துல்கர் சல்மான் இரட்டை வேடங்களில் நடித்துள்ள கிங் ஆஃப் கோதா திரைப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 8-ந் தேதியே வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால் அன்றைய தினம் இயக்குனர் சித்திக் மரணம் அடைந்ததன் காரணமாக அப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது கிங் ஆஃப் கோதா படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. நடிகர் சூர்யா தான் இப்படத்தின் டிரைலரை வெளியிட்டார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்த டிரைலர் தற்போது யூடியூப்பில் செம்ம வைரல் ஆகி வருகிறது. கிங் ஆஃப் கோதா திரைப்படம் வருகிற ஓணம் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது.