vuukle one pixel image

ஒரே ஜாதில கூட காதலுக்கு இப்படி பிரச்சனை இருக்கா? வெளியான 'மார்கழி' திங்கள் ட்ரைலர்!

manimegalai a  | Published: Sep 13, 2023, 9:44 PM IST

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில், விரைவில் ரிலீசாக உள்ள திரைப்படம் 'மார்கழி திங்கள்'. இந்த படத்தை இயக்குனர் சுசீந்திரன் தயாரித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பாரதி ராஜா வழக்கம் போல் தன்னுடைய முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

வழக்கமான காதல் கதையை, மோனோஜ் இயக்கி இருந்தாலும்... இந்த படத்தின் மூலம் புதுமையான கருத்தை என்ன சொல்ல வருகிறார் என்கிற எதிர்பார்ப்பு தூண்டியுள்ளது. பொதுவாக வேறு ஜாதியில் திருமணம் செய்து வைக்க பலர் எதிர்ப்பது உண்டு. ஆனால் ஒரே ஜாதியில் கூட, அந்தஸ்து, தலைக்கட்டு போன்ற பிரச்சனைகளால் காதலுக்கு எதிர்ப்பு வரும் என்பது தெரிகிறது. 

மேலும் இந்த படத்தில் ஷ்யாம் செல்வன் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக ரக்ஷனா என்பவர் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். மேலும் சுசீந்திரன், அப்புக்குட்டி, ஷர்மிளா, கோவை சாவித்திரி உள்ளிட்ட காப்பாளர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.