No டயலாக் ஒன்லி ஆக்ஷன்! சூர்யா மிஸ் செய்த பாலாவின் படைப்பு.. அருண் விஜய் நடிப்பில் வெளியான 'வணங்கான்' டீசர்!

Feb 19, 2024, 5:41 PM IST

தேசிய விருது இயக்குனரான பாலா, நடிகர் சூர்யாவை வைத்து இயக்க இருந்த திரைப்படம் வணங்கான். இந்த படத்தை சூர்யாவே தன்னுடைய 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்தார். வணங்கான் படத்தின் படபிடிப்பு துவங்கி ஒரு மாதம் வரை நடந்த நிலையில், திடீரென இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்படுவதாக அறிக்கை வெளியானது. சூர்யா மதிப்பீடு செய்த தொகையை விட அதிகமாக பாலா செலவு செய்ததும், படப்பிடிப்பில் நடந்த கருத்து வேறுபாடும் தான் சூர்யா படத்தில் இருந்து விலக முக்கிய காரணம் என கூறப்பட்டது.

மேலும் நடிகர் சூர்யா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்ட நிலையில், பாலாவும், சூர்யா இந்த படத்தில் இருந்து விலகுவதாகவும்... விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு மற்றொரு நடிகரை வைத்து எடுக்கப்படும் என தெரிவித்தார். அதன்படி வணங்கான் படத்தின் படபிடிப்பு நிறுத்தப்பட்ட ஒரு சில மாதங்களில் மீண்டும் இயக்கும் நடிகர் அருண் விஜய்யை வைத்து இப்படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

 தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ள நிலையில், இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க உள்ளார்.  ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, ஆர் சி குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, சதீஷ் சூர்யா பட தொகுப்பு செய்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள இந்த படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.