vuukle one pixel image

மூன்று ஹீரோயின்கள்... ஒரு காதல்..! அசோக் செல்வனின் நியூ லவ் ஸ்டோரி... நித்தம் ஒரு வானம் டீசர் இதோ

Ganesh A  | Published: Sep 24, 2022, 7:49 AM IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் அசோக் செல்வன். இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள காதல் படம் ‘நித்தம் ஒரு வானம்’. ரா.கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி, ரித்து வர்மா, ஷிவாத்மிகா ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். கோபி சுந்தர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வித்து அயன்னா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நித்தம் ஒரு வானம் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டீசரில் நடிகர் அசோக் செல்வன், மூன்று வித்தியாசமான கெட் அப்களில் தோன்றியுள்ளார். சமூக வலைதளங்களில் இந்த டீசர் வைரலாகி வருகிறது. இப்படம் வருகிற நவம்பர் மாதம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.