அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள 'மிஷன் சேப்டர் 1' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வெளியாக உள்ள திரைப்படங்களில் ஒன்று 'மிஷன் சாப்டர் 1'அருண் விஜய் நடித்துள்ள, இந்த படத்தை, இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கி உள்ளார். மேலும் இந்த படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபி ஹாசன், பாரதி போபனா, பேபி லயல். உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படத்தை, லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ஆக்சன் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது. தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகும், ஜனவரி 12ஆம் தேதியை குறி வைத்தே இந்த படமும், உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, சந்திப் கே விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ளார். ஸ்டண்ட் சிவா இந்த படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். தற்போது வெளியாகி உள்ள இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தன்னுடைய மகளுக்காக மிகப்பெரிய போராட்டத்தை, கையில் எடுக்கும் தந்தையாக அருண் விஜய் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நிமிஷம் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.