அரசு மருத்துவமனை முன்பு கத்தியால் ஒருவரை ஒருவர் மாறி மாறி குத்திக் கொண்டு தகராறு.. சிசிடிவி காட்சி

அரசு மருத்துவமனை முன்பு கத்தியால் ஒருவரை ஒருவர் மாறி மாறி குத்திக் கொண்டு தகராறு.. சிசிடிவி காட்சி

Published : Oct 02, 2022, 05:00 PM IST

திருவாரூரில் அரசு மருத்துவமனையில் ஒருவரை ஒருவரை மாறி மாறி கத்தியால் குத்தி கொல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 
 

திருவாரூரில் அரசு மருத்துவமனையில் ஒருவரை ஒருவரை மாறி மாறி கத்தியால் குத்தி கொல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 

அங்கு மகப்பேறு பிரிவில் இருவர் மோதிக்கொள்ளும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.  திருவாரூரை சேர்ந்த சுரேஷ் என்பவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவிக்கு நேற்று அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் இந்த குழந்தையை பார்ப்பதற்கு இவரது அண்டை வீட்டை சேர்ந்த கண்ணன் என்பவர் வந்துள்ளார். இவருக்கு வயது 50 இவருக்கும் சுரேஷ் இடையில் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க:IAS அதிகாரியின் மனைவியிடம் தகாத வார்த்தைகளால் பேசிய அழகிரியின் பேரன்; வீடியோ வைரல்

இதனிடையே நேற்று மருத்துவமனைக்கு வந்த கண்ணனுக்கும் சுரேஷ்க்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றி, ஒருவரை ஒருவர் கத்தியால் குத்தி தாக்கியுள்ளனர். மகப்பேறு பிரிவு முன்பு நடைபெற்ற இந்த சண்டையால், அங்கிருந்தவர் பயந்து அலறி அடித்து ஓடியுள்ளனர்.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் மற்றும் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுக்குறித்து வழக்கு பதிவு செய்த திருவாரூர் நகர் போலீசார் தகராறு எற்படுவதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனை முன்பு இருவர் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கிக் கொள்ளும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

03:29வரும் 23ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
03:19தஞ்சையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்ற சுற்றலாப் பொங்கல் திருவிழா ! வைரல் வீடியோ
05:02சென்னை சங்கமம் கிராமிய கலை நிகழ்வுகளுடன் தொடக்கம் ! திமுக எம்.பி.கனிமொழி பேட்டி
02:15எத்தனை பேர் சேர்ந்து வந்தாலும் திமுகவை வெல்ல முடியாது 2026ல் திமுக வெற்றி பெறப்போவது உறுதி
03:43தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது...! அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு
05:51மக்களுக்கு தெரியாமல் அரசு மதுபான கடை அரசுக்கு எச்சரிக்கை பொதுமக்கள் போராட்டம்
05:292026 இல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வெற்றிபெறும் - வானதி சீனிவாசன் பேட்டி
04:29உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இதுவரை பத்தாயிரம் முகாம்களில் நடத்தப்பட்டிருக்கிறது - மா சுப்பிரமணியன் !
04:19ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு எல்லா உரிமையும் உள்ளது ! வைகோ பேட்டி.
03:10பராசக்தி திரைப்படம் தொடர்பான கேள்விக்கு விமர்சனமாக பதிலளித்தார் நயினார் நாகேந்திரன்