
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் இன்று ஜூன் 22"ந்தேதி தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை புறநகர் கிழக்கு மாவட்டத்தின் செயலாளர் பாபு தலைமையில் கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த பெண் நிர்வாகிகள் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர்.15 நிர்வாகிகள் உடல் உறுப்பு தானம் செய்துள்ள நிலையில் இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் உடல் உறுப்பு தானம் செய்துள்ளது நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..