DSP ரேங்கில் இருந்த "சீசர்" என்ற மோப்பநாய்.. உடல் நலக்குறைவால் இறப்பு - 12 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்!

DSP ரேங்கில் இருந்த "சீசர்" என்ற மோப்பநாய்.. உடல் நலக்குறைவால் இறப்பு - 12 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்!

Ansgar R |  
Published : Jun 28, 2024, 10:18 PM IST

Thanjavur : பல வருடமாக காவல்துறையினருக்கு பல வகையில் உதவிய சீசர் என்ற மோப்பநாய் இறந்துள்ளது, தஞ்சாவூர் காவல்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை காவல் பிரிவில், கடந்த 2015ம் ஆண்டு முதல், கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் வெடிமருந்து மற்றும் வெடிப்பொருட்களை கண்டறியும் பிரிவில் பணிபுரிந்து வந்த மோப்பநாய் தான் சீசர். தஞ்சாவூருக்கு முதல்வர் மற்றும் பிரதமர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வரும்பொழுது சீசர் தான் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த சீசர், தனது ஒன்பதாவது வயதில் இன்று உயிரிழந்துள்ளது. இதனை அடுத்து தஞ்சை டிஐஜி அலுவலகம் பின்புறத்தில் உள்ள இடத்தில், 12 குண்டுகள் முழங்க அரசு மரியாதையோடு சீசர் என்கின்ற அந்த மோப்ப நாயின் உடலானது அடக்கம் செய்யப்பட்டது. 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் உள்ளிட்ட பல முக்கிய காவல்துறை அதிகாரிகள் சீசருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

04:29உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இதுவரை பத்தாயிரம் முகாம்களில் நடத்தப்பட்டிருக்கிறது - மா சுப்பிரமணியன் !
04:19ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு எல்லா உரிமையும் உள்ளது ! வைகோ பேட்டி.
03:10பராசக்தி திரைப்படம் தொடர்பான கேள்விக்கு விமர்சனமாக பதிலளித்தார் நயினார் நாகேந்திரன்
02:1741 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்காக நடிகர் விஜய் டெல்லி புறப்பட்டார்..
04:54பாஜக அரசு எவ்வளவு பூச்சாண்டி காட்டினாலும் தமிழ்நாட்டில் ஒன்றும் நடக்காது ! கி. வீரமணி அதிரடி பேச்சு
06:353000 பொங்கல் பரிசு திமுக கட்சி நிதி அல்ல? ....மக்களின் வரி பணம் ! ஆர்.பி .உதயகுமார் குற்றச்சாட்டு
03:55ஜனநாயகன் திரைப்படம் நெருக்கடிக்கு அரசியல் காரணம் இல்லை ! நடிகர் சரத்குமார் பேட்டி
06:34திரை உலகத்தின் மீது தாக்குதல் அது ஒரு கலை சார்ந்த படைப்பு - எம்.பி ஜோதி மணி பேட்டி
03:37நிச்சயமாக கோவில் யானைகளை கொண்டு வர முயற்சி செய்கிறோம் இந்த ஆட்சியில் நல்லதே நடக்கும்
04:36விஜய்யின் படத்தை வெளியிடுவதற்கு நெருக்கடி கொடுப்பதெல்லாம் தவறு ! அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி
Read more