கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் காயமடைந்த மாணவர் விஸ்வேஷ் முக்கிய வாக்குமூலம் ஒன்றை கொடுத்துள்ளார். அதன்படி, ரயில்வே கேட் மூடப்படவில்லை.. அது திறந்தே இருந்தது என்றும், ரயில்வே கேட் கீப்பர் அவரது அறையிலேயே அமர்ந்திருந்ததாக கூறி இருக்கிறார்.