மூணாறில் தமிழக அரசுப் பேருந்தை வழிமறித்த படையப்பா யானை; மரண பீதியில் பயணிகள்

மூணாறில் தமிழக அரசுப் பேருந்தை வழிமறித்த படையப்பா யானை; மரண பீதியில் பயணிகள்

Published : Mar 01, 2024, 03:53 PM IST

கேரளா மாநிலம் மூணாறில் தமிழக அரசுப் பேருந்தை வழி மறித்த படையப்பா காட்டு யானையால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் மரண பீதி அடைந்தனர்.

கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் படையப்பா மற்றும் கொம்பன் ஆகிய இரண்டு காட்டு யானைகள் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தும், சாலையில் செல்லும் வாகனங்களை வழி மறித்தும் அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக படையப்பா யானையின் தொல்லை இல்லாமல் இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக தேனி மாவட்ட எல்லையான கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் படையப்பா யானை சாலைகளில் வளம் வந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நைமக்காடு எஸ்டேட் பகுதி அருகே உள்ள சாலையில் சென்ற லாரியை மறித்து நின்ற நிலையில் தற்போது நேற்று இரவு மூணாறில் பயணிகளை ஏற்றி வந்த தமிழக அரசு பேருந்தை வழிமறித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அச்சுறுத்தி வந்தது.

படையப்பா யானை பேருந்து முன் வந்து நின்றதும் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்து பேருந்தை பின்னால் இயக்க ஓட்டுனரிடம் கூறியுள்ளனர். சுமார் ஒரு மணி நேரமாக பேருந்தை வழிமறித்து நின்ற யானை பின் அங்கிருந்து நகர்ந்து சென்றது. இதனை அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் தங்கள் செல்போனில் பதிவு செய்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

03:473000 ரூபாய் பொங்கல் பரிசா ? தேர்தல் பரிசா? - ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு
01:58சுவாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலில் இருந்து வெளிவந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
02:43திராவிட முன்னேற்றக் கழகம் நம்பிக்கைக்கு துரோகமாக செயல்படுகிறார்கள் - குஷ்பூ விமர்சனம்
03:47அந்த வார்த்தைக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை ஜனநாயகன் குறித்து - அமைச்சர் சேகர்பாபு
04:37ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்குகுறித்து தற்போது சொல்லமுடியாது - கே எஸ் செங்கோட்டையன் பேட்டி
02:55அதிமுகவில் ஒன்றிணைய வேண்டும் அப்போது தான் மீண்டும் ஆட்சி அமைக்க முடியும் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
04:312026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் நடுத்தெருவில் நிற்பார்கள் ! அண்ணாமலை பேட்டி
05:322026ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் பெரும் மாற்றம் இருக்கும் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
02:07பாரத் மாதா கோஷத்தால் கோபமாகி கத்திய சேகர் பாபு! பரபரப்பு
02:24அண்ணாமலை இன்று சாமிதரிசனம் செய்துவிட்டு 6 அடி உயர வெள்ளி வேலை கொண்டு சக்தியம்மாவிடம் வழங்கினார்
Read more