"மோடி மீண்டும் பிரதமராகக்கூடாது.. அண்ணாமலை வெற்றி பற்றி எனக்கு தெரியாது" - சுப்பிரமணியன் சாமி பேட்டி!

"மோடி மீண்டும் பிரதமராகக்கூடாது.. அண்ணாமலை வெற்றி பற்றி எனக்கு தெரியாது" - சுப்பிரமணியன் சாமி பேட்டி!

Ansgar R |  
Published : Mar 24, 2024, 08:16 PM IST

Subramaniam Swamy : மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி பல சர்ச்சையான விஷயங்களை பேசி உள்ளார்.

மதுரை மாவட்ட பாஜக நிர்வாகியான சசிகுமார் என்பவருடைய இல்லத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பங்கேற்பதற்காக மதுரை வந்திருந்தார் சுப்பிரமணியன் சாமி. அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தை பொறுத்தவரை நயினார் நாகேந்திரன் கட்டாயம் வெற்றி பெறுவார் என்றும், அண்ணாமலையின் வெற்றி எப்படி இருக்கும் என்பது குறித்து எனக்கு தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். 

தமிழகத்தில் திமுக - பாஜக என்று தேர்தல் களம் மாறி உள்ளதா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, கனவு என்பது எல்லோருக்கும் இருக்கின்றது. அது நடக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று சிரித்தபடி பதில் அளித்தார். மேலும் வேட்பாளர்களை எல்லா இடத்திலும் நம்மால் நிறுத்த முடியும் ஆனால் அடிப்படை அமைப்பு வலுவாக உள்ளதா என்பதைத்தான் பார்க்க வேண்டும். 

பணத்தை கொடுத்து விளம்பரம் வேண்டுமானால் செய்யலாம், ஆனால் மக்களின் நம்பிக்கையை பெற்றால் மட்டுமே எல்லாம் சாத்தியம் என்றும் அவர் கூறினார். அதேபோல மோடியின் ஆட்சியில் இந்தியா பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையவில்லை. வெளியுறவு கொள்கைகளிலும் சிறப்பாக செயல்படாததால், பிரதமர் மோடி, சீனா இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்கவில்லை, மோடி இதுவரை எதுவுமே செய்யவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். 

மேலும் பாஜகவில் இருந்து தனக்கு பிரச்சாரம் செய்ய அழைப்பு எதுவும் வரவில்லை என்றும், அழைப்பு வந்தால் நிச்சயம் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என்றும் உறுதியளித்துள்ளார். மோடி மூன்றாவது முறையும் பிரதமர் ஆவாரா என்ற கேள்விக்கு அவர் மீண்டும் பிரதமராகவே கூடாது என்று சர்ச்சையான பதில் ஒன்றை அளித்திருக்கிறார் சுப்ரமணியன் சாமி. 

09:51விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு: வெற்றியாளர்களுக்கு முதலமைச்சர் பரிசளிப்பு விழா!
04:43பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் - கோடம்பாக்கத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் அமைச்சர் பேச்சு!
03:35தூத்துக்குடி நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
07:44மருத்துவமனைகளில் மருந்து இல்லை... இது ஒரு கேடுகெட்ட ஆட்சி - தவெகவை கடுமையாக சாடிய கனிமொழி !
11:35சென்னையில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்கம் : அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார்!
09:01தேர்தல் செலவு தொடர்பான புகார்கள் மற்றும் விமர்சனங்கள்: அமைச்சர் ராஜ்மோகன் பதில் !
04:26வதானேஸ்வரர் கோவிலில் புதிய வெள்ளி ரிஷப வாகன வெள்ளோட்டம் - தர்மபுர ஆதீனம் தொடங்கி வைத்தார் !
05:45மின்சார தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை: அவசர கால டெண்டர் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
03:55சென்னை மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள்: ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்தில் மழைநீர் வடிகால் ஆய்வு !
03:04சென்னையில் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டம்: வேல்முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கைது!
Read more