S.P. Velumani : "அதிமுக தான் பெரிய கட்சி.. பா.ஜ.க கணக்கிலேயே இல்லை" - தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் வேலுமணி!

S.P. Velumani : "அதிமுக தான் பெரிய கட்சி.. பா.ஜ.க கணக்கிலேயே இல்லை" - தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் வேலுமணி!

Ansgar R |  
Published : Mar 29, 2024, 10:36 PM IST

Minister S.P Velumani : மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ளனர். இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் நடந்த பிரச்சாரத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்துகொண்டார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் லோகேஷ் தமிழ்செல்வனை அறிமுகப்படுத்தி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறப்புரையாற்றினார்

கூட்டத்தில் சிறுப்புரையாற்றிய எஸ்.பி.வேலுமணி "அதிமுக-வை பொருத்தவரை வரும் தேர்தல் மிக முக்கியமானது.. தொண்டர்களை நம்பி களம் இறங்கியுள்ளோம்.. தமிழக மக்களுக்கு நல்ல திட்டங்கள் எதையுமே செய்யாத ஆட்சி திமுக ஆட்சி..மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு என மக்கள் திமுக ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்கள் கூட அதிமுக விற்கு வாக்களிக்க தயாராகி விட்டனர்.. இந்திய அளவில் வேண்டுமானால் பாஜக பெரிய கட்சியாக இருக்கலாம் ஆனால் தமிழகத்தில் சிறிய கட்சி தான்..மூன்று அல்லது நான்கு சதவிகித வாக்குகள் மட்டுமே அக்கட்சிக்கு உள்ளது..அதிமுக தயவில் தான் அவர்களுக்கு தமிழகத்தில் சில எம்.எல்.ஏ க்கள் உள்ளனர்..எனவே அதிமுக திமுக இடையே தான் இத்தேர்தலில் போட்டி..பாஜக கணக்கிலேயே இல்லை" என பேசினார்..

இதனை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அதிமுக நீலகிரி தொகுதி வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தான் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றால் மேட்டுப்பாளையத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலை போக்க புறவழிச்சாலை திட்டம் கொண்டு வருவேன் என பேசினார்.

03:58தமிழ்நாட்டின் நலனுக்காக அதிமுக இருக்கிறதா...இல்லை மோடிக்காக இருக்கிறதா ? செல்வப்பெருந்தகை ஆவேசம்
05:09நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது... எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார்..
03:27வேடநத்தம் சிறுமி படுகொ**லை குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது, முதலமைச்சர் அவர்கள் உறுதியாக இருக்கிறார்
03:50திமுக ஆட்சியில் பெண்களுக்கு எப்போதும் ஜாக்பாட்.!சபாநாயகர் அப்பாவு சொன்ன ரகசியங்கள்...
04:21ஏழை மற்றும் நடுத்தர மக்களின் உணர்வுகளை இந்த அரசு மதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்
03:44அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம், கட்சியின் பெயரை அறிவித்து காட்டியுள்ளார்..
04:49சமையல் எரிவாயு (LPG) மற்றும் ஆட்டோ கேஸ் (Auto LPG) பற்றாக்குறையைக் கண்டித்து ஓட்டுநர்கள் போராட்டம்
04:462010-ம் ஆண்டிலேயே அதிமுகவில் பொறுப்பில் இருந்திருக்கிறேன், அதிமுகவில் இணைந்த காளியம்மாள்..!
04:52தேசிய ஜனநாயக கூட்டணியால் தமிழகத்தில் நுழைய முடியாது - அமைச்சர் ரகுபதி
03:03தேமுதிக அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
Read more