Raid : தேர்தல் நேரம்.. பணம் பதுக்கி வைத்ததாக தகவல் - முன்னாள் திமுக MLA ஆறுமுகத்தின் உறவினர் வீட்டில் சோதனை!

Raid : தேர்தல் நேரம்.. பணம் பதுக்கி வைத்ததாக தகவல் - முன்னாள் திமுக MLA ஆறுமுகத்தின் உறவினர் வீட்டில் சோதனை!

Ansgar R |  
Published : Apr 05, 2024, 11:21 PM IST

Income Tax Raid : தேர்தல் நேரத்தில் ஒரு பிரபலத்தின் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் வருமானவரி துறையினர் சோதனை நடத்தினர். 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எட்டிமடை பகுதியில் உள்ள பிரபல தொழிலதிபரும், திமுக அபிமானியுமான திருச்செங்கோடு முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் டிபி ஆறுமுகத்தின் நெருங்கிய உறவினருமான, தனசேகர் என்பவர் வீட்டில் தேர்தலுக்கான பணம் பதிக்கி வைக்கப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமாவுக்கு வந்த  ரகசிய தகவலின் அடிப்படையில் திருச்செங்கோடு மற்றும் நாமக்கல் வருமானவரித்துறை அதிகாரிகள் பத்துக்கும் மேற்பட்டோர் தனசேகர் என்பவரது வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதுவரை இரண்டு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எட்டிமடை புதூர் பகுதியில் வசித்து வருபவர் தனசேகரன் இவர் வீட்டில் தேர்தலுக்கு பணம் கொடுக்க பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா வருமானவரித்துறைக்கு தனசேகர் வீட்டில் சோதனையிட பரிந்துரை செய்தார். 

திருச்செங்கோடு எட்டிமடை புதூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை முதல் 12க்கும் மேற்பட்ட  வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனையில் அவரது வீடு, அலுவலகம், தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களில் சுமார் 2 கோடி ரூபாய் அளவிற்கு பணம் இருந்தது தெரிய வந்துள்ளது. தற்போது சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின் நிறைவில் தான் எவ்வளவு பணம் பிடிப்பட்டது என்பது முழுமையாக தெரிய வரும். 

இந்த தனசேகர் திருச்செங்கோடு செங்குந்தர் கல்லூரியில் நிர்வாகியாக உள்ளார் என்பதும், இவர் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் டிபி ஆறுமுகத்தின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எட்டிமடை புதூரில் நடைபெற்று வரும் சோதனை திருச்செங்கோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

07:38குழந்தைகளின் பாதுகாப்பிற்காக களம் இறங்கிய முதல்வர் விஜய்..! சென்னையில் தேசிய போலியோ முகாம் துவக்கம்!
02:57இவர்களுக்கெல்லாம் மகளிர் உரிமைத்தொகை கட்? தமிழக அரசு அதிரடி பிளான்! அதிர்ச்சியில் பெண்கள்!
03:26"Start Run, Stop Drugs" புதிய பாதை வகுத்த முதலமைச்சர் விஜய்.! 😎
04:183 கிலோமீட்டர் நிற்காமல் ஓடிய முதலமைச்சர் விஜய்..! இளைஞர்களுடன் சேர்ந்து தளபதி செய்த சம்பவம்.!
08:49முதல்வர் சட்டமன்றத்தை ஒரு திரைப்பட அரங்கமாக மாற்றாமல் இருக்க வேண்டும் ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
03:13அப்பாவ அங்க தேடாதிங்க....மக்கள் மனதில் போய் தேடுங்க இருப்பேன்! முதல்வருக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்!
02:41Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?
08:21"மின் வாரியத்தின் ரகசியங்கள் அம்பலம் ! அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்ட அதிரடி வெள்ளை அறிக்கை!"
05:53புதிய மைல்கல்: தமிழ்நாட்டில் 300 புதிய பேருந்து சேவைகளைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!
03:09சென்னை மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுனசிலர்கள் கடும் முழக்கம்; வெளிநடப்பு செய்த காங்கிரஸ்!