IPL-லும்.. அதிமுகவும் ஒன்னு தான்.. ஒபிஸ்.. இபிஸ்.. தீபா என்று பல அணிகள் உள்ளது - உதயநிதி ஸ்டாலின்!

Mar 25, 2024, 9:32 PM IST

வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தங்களது பிரச்சாரத்தை முழுமையாக துவங்கியுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி ஆகியவற்றுக்கிடையே போட்டி உள்ளதாக கருதப்படுகிறது.

இந்தநிலையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக செல்வம் அறிவிக்கப்பட்டு தனது பிரச்சாரத்தை துவங்கி உள்ளார். அவருக்கு ஆதரவாக திமுகவின் இளைஞரணி தலைவரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் இன்று பரப்புரை மேற்கொண்டார். திமுகவின் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமென பொதுமக்கள் மட்டும் கூட்டணி கட்சியினர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். 

இதனை அடுத்து திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது : 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வம் அவர்களை வெற்றி பெற செய்தால் மாதம் 2 முறை காஞ்சிபுரத்திற்கு வருகை தந்து மக்களை சந்தித்து கோரிக்கையை கேட்ட வருவேன். காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரி கொண்டுவரப்படும். 

கூடுதல் ரயில்சேவை செல்ல வழிவகை செய்யப்படும். எடப்பாடி பழனிச்சாமி  சொல்கிறார் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் எய்ம்ஸ் கல்லை காட்டினார் என்று கூறுகிறார், நானவது கல்லை காட்டினேன், எடப்பாடி பழனிச்சாமி மோடியுடன் சேர்ந்த புகைப்படத்தை காட்டி பல்லை காட்டி பேசினார். நானாவது ஒரே மாதிரி தான் பேசுகிறான் பேச்சை மாத்தவில்லை, எய்ம்ஸில் இருந்தது ஒரே ஒரு கல் தான், அதையும் நானே எடுத்துட்டு வந்துட்டேன். 

எடப்பாடி பழனிச்சாமி ஒவ்வொருவருடன், ஒவ்வொருவர் மாதிரி பெறுகிறார். ஓபிஸ், மோடி, ஜெய தீபா, TTV என ஒவ்வொருவரிடமும் ஒரு மாதிரி பேசுகிறார். பொய் வழக்கு போட்டு பயமுறுத்துகிறது, IPL லும், அதிமுகவும் ஒன்னு தான், ஒபிஸ் அணி, இபிஸ் அணி, தீபா அணி என பல்வேறு அணி உள்ளது என விமர்சனம் செய்து பேசினார். இந்தப் பிரச்சார கூட்டத்தில் ஏராளமான திமுக தொண்டர்கள் பொதுமக்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.