
தூத்துக்குடி, சோரிஸ்புரம் பகுதியில் பல்நோக்கு புகலிட மையம் மற்றும் மாதிரி அரசு பள்ளி புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழாவானது நடைபெற்றது. இதனை தூத்துக்குடி எம்பி கனிமொழி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, வாக்கு திருட்டானது மற்ற மாநிலங்களில் ஏற்பட்டிருக்கக் கூடிய குழப்பங்கள் போல இங்கு ஏற்படக்கூடாது என்ற வகையில் தமிழக முதலமைச்சர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய உடன்பிறப்புகளுக்கு தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். பல இடங்களில் இதனை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. அது தமிழகத்தில் நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றோம். பீகார் தேர்தல் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு? நீதி வெல்ல வேண்டும், ஜனநாயகம் வெல்ல வேண்டும், மக்கள் வெல்ல வேண்டும் என்பது அத்தனை பேருடைய ஆசை. அது நடக்க வேண்டும். தூத்துக்குடியில் இஎஸ்ஐ மருத்துவமனை கிட்டத்தட்ட முடிந்து விட்டது. 3 மாதத்தில் திறந்து விடலாம் என்றார்.