சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் 8 ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கட்சி கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். நான் 20 வருடங்களுக்கு முன்பு அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். வரத் தவறியதுதான் எனக்கு தோல்வியாகபடுகிறது. அப்படி வந்திருந்தால், இன்று நான் வந்து நின்று பேசும் இடம் வேறாக இருந்திருக்கும்.இந்த வருடம் நமது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கப்போகிறது. அடுத்த வருடம் உங்கள் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கப்போகிறது. அதற்கான விழாதான் இது என கமல்ஹாசன் பேசினார்.