Aug 6, 2022, 1:27 PM IST
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று ஜவ்வாது மலை பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக பொய்யாரு ஓடையில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த பொய்யாறு ஓடையை கடக்க முயன்ற ஒரு முதியவரின் இருசக்கர வாகனத்தை இளைஞர்கள் காப்பாற்றி மீட்டு வந்த நிலையில் மற்றொரு இளைஞரின் இரு சக்கர வாகனம் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியது. இருசக்கர வாகனத்தை மீட்க இளைஞர்கள் முயன்ற போதும் இரு சக்கர வாகனம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது.