Aug 29, 2022, 10:16 AM IST
முன்னாள் முதல்வர் கருணாநிதி கோபாலபுரம் வீட்டை சரபேஸ்வரர் என்பவரிடம் 1955ம் ஆண்டு மார்ச் மாதம் வாங்கி இருந்தார். அப்போது சரபேஸ்வரரின் பேத்திக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்த வீட்டில் திருமணம் நடைபெற வேண்டும் என்று பேத்தியின் விருப்பத்தை கருணாநிதியிடம் சரபேஸ்வரர் கூறியுள்ளார். அதற்கு ஒப்புக் கொண்ட கருணாநிதி, இரண்டு மாதங்கள் அந்த வீட்டை அவர்களுக்கு கொடுத்து இருந்தார்.
மலரும் நினைவுகளுடன் கோபாலபுரம் வீட்டை காண வேண்டும் என்று அமெரிக்காவில் இருந்து சென்னை வந்திருந்த சரபேஸ்வரரின் பேத்தி சரோஜா சீதாராமன் விருப்பம் தெரிவித்துள்ளார். இதை ஊடகங்கள் வாயிலாக அறிந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் சரோஜா சீதாராமன் குடும்பத்தினரை, கோபாலபுரம் இல்லத்திற்கு வரவழைத்து காலை உணவு அளித்து, வீட்டை சுற்றிக் காட்டினார்.