Samantha Ruth Prabhu, Naga Chaitanya, Sobhita Dhulipala
நாக சைதன்யாவும் சோபிதா துலிபாலாவும் இன்று (டிசம்பர் 4) தங்கள் குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு மத்தியில் திருமணம் செய்துகொண்டனர். ஆனால் சைதன்யாவின் முதல் மனைவியான சமந்தாவும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். சமந்தா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஸ்டோரி தான் அதற்குக் காரணம்.
Naga Chaitanya, Sobhita Dhulipala
தனது முன்னாள் கணவர் நாக சைதன்யா சோபிதா துலிபாலாவுடன் திருமணம் செய்து கொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு சமந்தா ஒரு இன்ஸ்டா ஸ்டோரியைப் பகிர்ந்துள்ளார். அமெரிக்க நடிகையும் தயாரிப்பாளருமான வயோலா டேவிஸ் முதலில் வெளியிட்ட வீடியோவை சமந்தா தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஒரு சிறுமி தனது எதிரியான சிறுவனுடன் சண்டையில் ஈடுபடும் காட்சி இடம்பெற்றுள்ளது.
Samantha Instagram Story
சிறுவன் அழுது கண்ணீர் சிந்த, சிறுமி சண்டையில் வெற்றி பெறுவதுடன் வீடியோ கிளிப் முடிகிறது. #FightLikeAGirl (ஒரு பெண்ணைப் போல சண்டையிடுங்கள்) என்ற ஹேஷ்டேக்குடன் சமந்தா இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ அவரது முன்னாள் கணவரின் இரண்டாவது திருமணத்திற்கு மறைமுகமான எதிர்வினையா என்று ரசிகர்கள் யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.
Samantha Viral Video
சமந்தா பகிர்ந்த வீடியோவை முதலில் பதிவிட்டிருந்த வயோலாவின் பதிவில் இருந்த கேப்ஷன் குறிப்பிடத்தக்கது. "ஒரு பூவைப் போல அல்ல, வெடிகுண்டு போல" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Samantha Ruth Prabhu, Naga Chaitanya
சமந்தா தனது சமூக வலைதளங்களில் இன்னும் நாக சைதன்யாவின் படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்திருக்கிறார். நாக சைதன்யா இரண்டாவது முறையாக திருமணம் செய்துகொள்ளும் நிலையில், அவரது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அது சோபிதா துலிபாலாவுடன் இருக்கும் படம் இல்லை, முன்னாள் மனைவி சமந்தாவுடன் இருக்கும் படம்.
Samantha Chaitanya Wedding
அது சமந்தா - சைதன்யா திருமணத்தின்போது எடுத்த படம். வைரலான படம் சைதன்யா மற்றும் சமந்தாவின் கிறிஸ்தவ முறை திருமணத்தின்போது எடுக்கப்பட்டது. அதில் சமந்தா சைதன்யாவுக்கு கன்னத்தில் ஒரு முத்தம் கொடுக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
Samantha Naga Chaitanya Divorce
சைதன்யாவும் சமந்தாவும் தங்கள் நான்காவது திருமண நாளுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இந்தச் செய்தி அவர்களின் ரசிகர்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அப்போதிருந்து, சைதன்யா பெரும்பாலும் விவாகரத்து பற்றி பேசாமல் இருந்தார். ஆனால் சமந்தா அந்த அனுபவம் கசப்பானது என்று வெளிப்படையாகக் கூறிவிட்டார்.
Naga Chaitanya Sobhita Dhulipala Dating
நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் இதுவரை யாரும் பார்த்திராத படங்களை ராணா டகுபதி தனது நிகழ்ச்சியில் வெளியிட்டார். அவையும் இணையத்தில் வைரலாகியுள்ளன. சைதன்யா மற்றும் சோபிதாவின் ரசிகர்கள், அவர்களின் டேட்டிங் படங்களைக் கண்டு மிகவும் உற்சாகமடைந்துள்ளனர்.
Naga Chaitanya in Rana Daggubati Show
இதனிடையே ராணாவின் நிகழ்ச்சியில் வரவிருக்கும் எபிசோடில் ராணாவின் உறவினராக மாறிய மாப்பிள்ளை நாக சைதன்யாவும் பங்கேற்க இருக்கிறார். சைதன்யா தங்கள் டேட்டிங் படங்கள் பற்றி விரிவாகப் பேசுவாரா என்பது அடுத்த எபிசோடு வெளியான பிறகுதான் தெரியும்.