அக்கா மேல அம்புட்டு பாசமா! பர்த்டேக்கு காஸ்ட்லி கிஃப்ட் கொடுத்த சிவகார்த்திகேயன்

First Published | Dec 4, 2024, 7:49 PM IST

Sivakarthikeyan Sister Gowri Birthday : நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய அக்காவின் பிறந்தநாளுக்கு காஸ்ட்லி கார் ஒன்றை பரிசாக கொடுத்து தன் வாழ்த்துக்களையும் தெரிவித்து இருக்கிறார்.

sivakarthikeyan Sister Gowri

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த அமரன் திரைப்படம் அடிபொலியான வெற்றியை பெற்றது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இப்படம் இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வந்தது. கமல்ஹாசன் இப்படத்தை தயாரித்து இருந்தார். நடிகர் சிவகார்த்திகேயன் கெரியரில் அதிக வசூல் செய்த படமாக அமரன் மாறி உள்ளது. இப்படம் 350 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்துள்ளது.

Sivakarthikeyan

அமரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது மூன்று திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையில் அந்த படங்களை முறையே ஏ.ஆர்.முருகதாஸ், சிபி சக்கரவர்த்தி மற்றும் சுதா கொங்கரா ஆகியோர் இயக்க உள்ளனர். இப்படி கோலிவுட்டின் பிசியான ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயன், தன் குடும்பத்தில் எந்த ஒரு முக்கிய நிகழ்வு நடந்தாலும் அது பற்றி தன் சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்... 2024-ல் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்? வசூலை வாரிக்குவித்த டாப் 5 படங்கள் லிஸ்ட் இதோ


Sivakarthikeyan Gifted Mini Cooper Car to his Sister Gowri

அந்த வகையில் சிவகார்த்திகேயனின் உடன் பிறந்த அக்காவான கெளரி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, ஒரு காஸ்ட்லி கிஃப்ட் ஒன்றையும் பரிசாக வழங்கி இருக்கிறார் சிவகார்த்திகேயன். அதன்படி மினி கூப்பர் காரை தான் அவர் தன் அக்காவுக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கி இருக்கிறார். அந்த காரின் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் அக்கா மேல அம்புட்டு பாசமா என கேட்டு வருகின்றனர். மேலும் இப்படி ஒரு தம்பி கிடைக்க அவர் கொடுத்து வச்சிருக்கனும் என பாராட்டியும் வருகின்றனர்.

Sivakarthikeyan Sister Gowri Birthday

மேலும் தன் அக்காவின் பிறந்தநாள் வாழ்த்து பதிவில் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளதாவது : “என்னுடைய மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன், என்னுடைய அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். குழந்தை பெற்ற பின் எம்பிபிஎஸ் படித்தது முதல், 38 வயதில் மருத்துவ மேற்படிப்பை மெரிட்டில் படித்து கோல்டு மெடல் வாங்கியது வரை நீ அனைத்து தடைகளையும் கடந்து வந்திருக்கிறாய். உங்களை பார்த்து அப்பா மிகவும் பெருமைப்படுவார். அவளுக்கு பக்கபலமாக இருக்கும் என்னுடைய அத்தானுக்கும் நன்றி” என பதிவிட்டு இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... இன்று 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் தமிழ் ஹீரோஸின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Latest Videos

click me!