பிரபல காமெடி நடிகருக்கு திடீர் உடல்நல குறைவு! அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி!

Published : Dec 04, 2024, 05:30 PM IST

பிரபல காமெடி நடிகர் மற்றும் மருத்துவர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக, தற்போது கிண்டி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

PREV
14
பிரபல காமெடி நடிகருக்கு திடீர் உடல்நல குறைவு! அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி!
Power Star Srinivasan

2011 ஆம் ஆண்டு வெளியான 'லத்திகா' என்கிற திரைப்படத்தை இயக்கி, தயாரித்து, அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். இந்த திரைப்படம் படுமோசமான தோல்வியை சந்தித்த போதிலும், இந்த படத்தை 100 நாட்கள் ஓட்ட வேண்டும் என தன்னுடைய சொந்த பணத்தை செலவு செய்து, ஒரு தியேட்டரையே 100 நாட்களுக்கு மேல் வாடகைக்கு எடுத்து இலவசமாக டிக்கெட்டையும் வழங்கி அதில் தன்னுடைய படத்தை ஓட்டிய பெருமை சீனிவாசனுக்கு உண்டு.

24
Comdey Movies

மேலும் தனக்கு தானே பவர்ஸ்டார் என்கிற பட்டத்தையும் வைத்துக்கொண்ட இவர், சந்தானம் நடித்து தயாரித்திருந்த 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்கிற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இவருடைய கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் காமெடி வேடங்களை தேர்வு செய்து நடித்து வந்தார்.

தன்மானத்தை சீண்டிய கண்ணதாசன்! மனைவியின் செயல்; பூரித்து போன நாகேஷ்!

34
Vanitha Vijayakumar And Power Star Movie

இவர் நடிப்பில் கடைசியாக 2018 ஆம் ஆண்டு வெளியான' கேப்மாரி' என்கிற திரைப்படம் வெளியானது. இதில் இவருடைய கதாபாத்திரமும் பாராட்டை பெற்ற நிலையில், வனிதா விஜயகுமார் ஜோடியாக 'பிக் அப் ட்ராப்' என்கிற படத்தில் பவர் ஸ்டார் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்துக்காக எடுக்கப்பட்ட போட்டோ சூட் புகைப்படங்கள் வெளியாகி படு வைரலானது. இந்த படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில், ஒரு சில காரணங்களால் இந்த திரைப்படம் தற்போது வரை ரிலீஸ் ஆகாமல் உள்ளது.
 

44
Power Star Srinivasan Hospitalized

கடந்த சில வருடங்களாகவே சிறுநீரக பிரச்சனை காரணமாக, வீட்டில் ஓய்வில் இருந்து வரும் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு,  இன்று மதியம் திடீரென கடுமையான உடல் நல பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, கிண்டி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இவருடைய உடல்நலம் குறித்த எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நெப்போலியன் கட்டியுள்ள மயோபதி மருத்துவமனை குழந்தைகளுக்கு நடிகர் கார்த்தி செய்த உதவி!

 

click me!

Recommended Stories