பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன்களான சூர்யா - கார்த்தி இருவருமே திரையுலகில் முன்னணி நடிகர்களாக உள்ளனர். மேலும் அண்ணன் - தம்பி இருவருமே, தங்களால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், கார்த்தி செய்த உதவி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
24
Karthi Help
சூர்யா தன்னுடைய அகரம் அறக்கட்டளை மூலம் ஏராளமான மாணவர்களை படிக்க வைத்து வருகிறார். இவர் மூலம் கல்வி பயின்ற ஏராளமான மாணவர்கள், மருத்துவர், இன்ஜினீயர் என பல உயர்தர பணிகளில் உள்ளனர். கார்த்தி உழவன் அறக்கட்டளை மூலம் விவசாயிகளுக்கும், ரசிகர்கள் மன்றம் மூலம் இன்னும் பிற உதவிகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில் மயோபதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் தேவையை அறிந்து... இவர் செய்துள்ள உதவி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளுக்கு சரியான படுக்கை இல்லாமல் அவர்கள் அவதி படுவதாக அறிந்த கார்த்தி, 35 குழந்தைகளுக்கு படுக்கை பெட் வாங்கி கொடுத்துள்ளார்.
44
Karthi Sivakumar
இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் கொம்பன் திரைப்பட படப்பிடிப்பு நடந்தபோது பல முறை இந்த மருத்துவமனைக்கு நடிகர் கார்த்தி சென்று வந்துள்ளார். மேலும் கார்த்தியின் இந்த எதிர்பாராத உதவிக்கு மயோபதி மருத்துவமனையின் மருத்துவர் டேனியல் மற்றும் குழந்தைகள் நடிகர் கார்த்திக்கு நன்றி தெரிவித்தனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.