'LIK 'படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்த மாஸ் ஹீரோ! பிரதீப் உள்ளே வந்தது எப்படி தெரியுமா?

First Published | Dec 4, 2024, 1:57 PM IST

விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி உள்ள 'LIK' திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்த மாஸ் ஹீரோ யார் என்கிற தகவலை, விக்னேஷ் சிவன் அண்மையில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
 

LIK movie

தமிழில் இளவட்ட ரசிகர்களுக்கு ஏற்ற போல் திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குனர்களில் ஒருவர் விக்னேஷ் சிவன். நடிகர் சிம்புவை வைத்து 'போடா போடி' திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார் விக்னேஷ் சிவன். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்ற போதிலும் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது. எனவே விக்னேஷ் சிவன் தன்னுடைய அடுத்த கதையை உடனடியாக எழுதி விட்டாலும் தயாரிப்பாளர் கிடைக்க 3 வருடம் ஆனது.

பின்னர் 2015-ஆம் ஆண்டு தனுஷ் தயாரிப்பில், நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கிய திரைப்படம் தான் 'நானும் ரௌடி தான்' . இந்த படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த திரைப்படம் நடிகை நயன்தாராவுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

Nayanthara and Vignesh Shivan

அதே போல் விக்னேஷ் சிவன் மீது நயன்தாரா காதல்வயப்பட காரணமாக அமைந்ததும் நானும் ரவுடி தான் திரைப்படம் தான். நயன் - விக்கி காதல் சுமார் ஆறு ஆண்டுகள் வரை நீடித்த நிலையில், இருவரும் 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆன நான்கே மாதத்தில், வாடகை தாய் மூலம் உயிர் - உலக் என இரட்டை குழந்தைகளையும் பெற்றெடுத்தனர்.

'நானும் ரவுடிதான்' படத்தின் வெற்றிக்கு பின்னர் சூர்யாவை வைத்து இவர் இயக்கிய 'தானா சேர்ந்த கூட்டம்' தோல்வியை தழுவினாலும், 2022-ஆம் ஆண்டு வெளியான 'காத்து வாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து அஜித்தின் 62 ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்ததாக கூறப்பட்டது.

சோத்துக்கு வழி இல்லாமல் பல நாள் பட்டினி; உருவ கேலிக்கு ஆளான காமெடி நடிகர் யோகி பாபுவின் சொத்து மதிப்பு!
 

Tap to resize

Vignesh shivan And Ajith combo Missed

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா வெளியிட்ட போதிலும், விக்னேஷ் சிவன் கூறிய கதை அஜித் மற்றும் லைகா நிறுவனத்திற்கு திருப்திகரமாக அமையாததால், அதிரடியாக விக்னேஷ் சிவனை அஜித் தன்னுடைய 62-ஆவது படத்தில் இருந்து வெளியேற்றினார். அஜித் படத்தை இயக்கம் வாய்ப்பு இயக்குனர் திருமேனிக்கு சென்றது. அண்மையில் இந்த படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு, இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த ஆண்டு அஜித்தின் ஒரு படங்கள் கூட வெளியாகவில்லை என்றாலும், அடுத்த ஆண்டு அஜித்தின் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கார்த்திருக்கிறது. காரணம் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து முடித்துள்ள 'குட் பேட் அக்லீ' படம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
 

Love Today Actor Pradeep Ranganathan

அஜித்தின் படம் கைவிட்டுப் போனதால், தற்போது விக்னேஷ் சிவன் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'. இந்த படத்தில் இயக்குனராக அறிமுகமாகி 'லவ் டுடே' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொண்ட பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் எஸ்.ஜே சூர்யா நடிக்க கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கௌரி கிஷன், மிஷ்கின், சீமான், ஆனந்தராஜ், சுனில் ரெட்டி, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.  இந்த காலத்திற்கு ஏற்ற போல் டைம் ட்ராவல் கான்செப்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை நயன்தாரா தன்னுடைய ரவுடி பிச்சர்ஸ் மோளம் தயாரித்துள்ளார்.

தனுஷின் 'இட்லி கடை' படத்தில் நடிக்க 3 மடங்கு அதிக சம்பளம் வாங்கிய அருண் விஜய் - இத்தனை கோடியா?
 

Sivakarthikeyan First Choice in LIK Movie

இந்த படத்தின் கதையை முதலில் விக்னேஷ் சிவன் நடிகர் சிவகார்த்திகேயனிடம் கூறியுள்ளார். அவருக்கும் கதை மிகவும் பிடித்து போக, லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க முன் வந்துள்ளது. சிவகார்த்திகேயனின் சம்பளம் இல்லாமல் இந்த படத்தின் பட்ஜெட் ரூ. 50 கோடி என விக்னேஷ் சிவன் கூற, அடுத்தது பெரிய படங்களை தயாரித்து வருவதால், இந்த படத்தை அடுத்த ஆண்டு தயாரிக்கிறோம் என லைகா தரப்பில் கூறப்பட்டது. எனவே சிவகார்த்திகேயனும் அமரன் படத்தில் கவனம் செலுத்த துவங்கினார்.

Nayanthara Produced Love Insurance Kompany

ஆனால் விக்கி இந்த கதையை இப்போது படமாக எடுத்தால் மட்டுமே ஈடுபடும், இல்லை என்றால் மிகவும் பழையதாக இருக்கிறது என்கிற உணர்வு ரசிகர்களுக்கு ஏற்படும் என்பதால் தன்னுடைய மனைவி நயன்தாரா தயாரிப்பிலேயே இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்தார். சிவகார்த்திகேயன் பிசியாக இருந்தது மட்டும் இன்றி, தன்னுடைய தோற்றத்தையும் மாற்றி நடிக்க இருந்ததால், இந்த கதைக்கு பிரதீப் செட் ஆவார் என எண்ணி அவரையே ஹீரோவாக வைத்து இயக்கி முடித்துள்ளார். கூடிய விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவி 'ஆஹா கல்யாணம்' சீரியலில் சம்பள விஷயத்தில் ஹீரோக்களை மிஞ்சிய ஹீரோயின்ஸ்! முழு விவரம்!
 

Latest Videos

click me!