21 வயதில் 2 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை ஸ்ரீலீலா.. யாருக்கும் தெரியாத மறுபக்கம்

First Published | Dec 4, 2024, 12:46 PM IST

நடிகை ஸ்ரீலீலாவின் திரைப்பயணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம். நடிகை ஸ்ரீலீலா, நடிகர் அல்லு அர்ஜுனுடன் புஷ்பா 2 படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார்.

Sreeleela Unknown Story

நடனத்தாலும், தனது திரைத்தோற்றத்தாலும் மிகக் குறுகிய காலத்தில் பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றவர் நடிகை ஸ்ரீலீலா.  கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான கிஸ் என்ற கன்னட படத்தின் மூலம் நடிகையாக திரையுலகில் அறிமுகமானார் நடிகை ஸ்ரீலீலா. கன்னட படத்திற்கு பிறகு தெலுங்கில் பெல்லி சண்டாடி (2021), ஜேம்ஸ் (2022) படத்தில் கேமியோவில் நடித்தார்.

Actress Sreeleela

நடிகர் ரவிதேஜாவின் தமாகா படத்தின் பாடல் ஸ்ரீலீலாவை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சென்றது. இதனையடுத்து பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி, மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் என பட்டையை கிளப்பினார். குர்சி மாடதாபெட்டி பாடலுக்கு ஸ்ரீலீலா போட்ட குத்தாட்டம் வைரல் ட்ரெண்ட் அடித்தது என்றே சொல்லலாம்.

Tap to resize

Sreeleela Parents

புஷ்பா 2-வில் அல்லு அர்ஜுனுடன் ஒரு பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார். நடிகை ஸ்ரீலீலா பற்றி யாருக்கும் தெரியாத விவரங்களை பார்க்கலாம். மகப்பேறு மருத்துவரான ஸ்வர்ணலதா மற்றும் தொழிலதிபரான சுரபனேனி சுதாகர் ராவ் ஆகியோரின் மகளாக 2001-ல் பிறந்தார் ஸ்ரீலீலா. இவர் பிறப்பதற்கு முன்பே பெற்றோர் பிரிந்துவிட்டனர். தாயுடன் வளர்ந்த ஸ்ரீலீலாவின் ஆசை மருத்துவராக வேண்டும் என்பதுதான்.

Sreeleela Adoption

ஆனால் இடையில் நடிகை ஸ்ரீலீலாவின் ஆசை துளிர்விட்டது. ஆனால் குடும்பத்தினர் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். பிறகு குடும்பத்தினர் ஸ்ரீலீலாவின் ஆசைக்கு ஓகே சொல்லிவிட்டனர். ஸ்ரீலீலா இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளைத் தத்தெடுத்தார். 2022-ல் தான் இது நடந்தது.  பை டு லவ் என்ற கன்னட படத்தில் இளம் வயதிலேயே தாயாக நடித்தார்.

Pushpa 2 The Rule

இதன் பின்னரே குழந்தைகளைத் தத்தெடுக்க முடிவு செய்தார். தத்தெடுப்பின் மூலம் இரண்டு குழந்தைகளுக்குத் தாயானபோது ஸ்ரீலீலாவுக்கு வயது 21. ஆண் மற்றும் பெண் குழந்தைகளைத் தத்தெடுத்தார். மேலும் தற்போது வரை பல தொண்டு நிறுவனங்களுக்கும் உதவி வருகிறார்.

தனுஷின் 'இட்லி கடை' படத்தில் நடிக்க 3 மடங்கு அதிக சம்பளம் வாங்கிய அருண் விஜய் - இத்தனை கோடியா?

Latest Videos

click me!