Tharshika
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் தற்போது 50 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் முதல் 6 வாரம் பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் என்கிற கான்செப்டில் நடத்தப்பட்டு வந்தது. இதனால் பாய்ஸ் ஒரு அணியாகவும், கேர்ள்ஸ் ஒரு அணியாகவும் பிரிந்து விளையாடி வந்தனர். ஆனால் அந்த ஆட்டம் சுவாரஸ்யம் இல்லாததால் இரு அணிகளாக இருந்த பிக்பாஸ் வீடு தற்போது ஒரே அணியாக மாறி உள்ளது. இதனால் ஆட்டம் மேலும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
Soundarya
கடந்த வாரம் நடந்த பொம்மை டாஸ்கின் போதே ஏராளமான சண்டை சச்சரவுகள் இருந்த நிலையில், இந்த வாரம் ஏஞ்சல் வெர்சஸ் டெவில் என்கிற டாஸ்க் கொடுக்கப்பட்டு, அதில் ஏஞ்சல் அணியில் 8 போட்டியாளர்களும் டெவில் அணியில் 9 போட்டியாளர்களும் இடம்பெற்று உள்ளனர். டெவில் என்பதற்கு ஏற்றார் போல் அவர்கள் அரக்க குணம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்கிற விதியும் போடப்பட்டு உள்ளது. வழக்கமாக டெவில் அணியினர் ஏஞ்சல் அணியினரை தான் டார்ச்சர் செய்வார்கள்.
இதையும் படியுங்கள்... ஆசிட் அடிச்சிருவேன்னு மிரட்டுறாங்க; பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா பரபரப்பு குற்றச்சாட்டு
Jacquline
ஆனால் இந்த சீசனில் டெவில் அணியினர் அவர்களுக்குள்ளேயே சண்டைபோட்டுக் கொண்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அதன்படி டெவில் அணியில் உள்ள தர்ஷிகா தன் சக அணியினரான ஜாக்குலின் மற்றும் செளந்தர்யா உடன் ஆக்ரோஷமாக சண்டைபோட்டுக் கொண்ட புரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் படு வைரலாகி வருகிறது. அதில் கேரக்டரை விட்டு வெளியே வந்து தர்ஷிகாவை ஜாக்குலின் பர்சனல் அட்டாக் செய்ததாக தெரிகிறது.
Bigg Boss Contestants Fight
இதனால் கடுப்பான தர்ஷிகா, டெவிலா இருந்தா டெவிலா இரு. ச்சீ போனு சொல்லாத என ஜாக்குலினுடன் சண்டைக்கு போக, அருகே இருந்த செளந்தர்யாவும் தர்ஷிகாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்குகிறார். அப்போது அறிவில்ல என ஜாக்குலின் தர்ஷிகாவை பார்த்து கேட்க, அதற்கு இல்ல டி என தர்ஷிகா சொன்னதும் ஜாக்குலின் கெட்ட வார்த்தையில் திட்டிவிடுகிறார். உடனே அப்படியெல்லாம் பேசாத என தர்ஷிகா சொல்ல, நான் அப்படிதான் பேசுவேன் என ஜாக்குலின் எகிறி வந்ததும். இப்படியெல்லாம் பேசுறதுக்கு இது ஒன்னும் உங்க அப்பன் வீடு இல்லடி என தர்ஷிகா கூறுகிறார்.
இதனால் கடுப்பான செளந்தர்யா, அது எப்படி நீ அப்பாவ பத்தி பேசலாம் என தர்ஷிகா உடன் சண்டைக்கு போக, இருவருக்கும் இடையே கைகலப்பு ஆகிறது. பின்னர் அவர்களை சக போட்டியாளர்கள் பிரித்துவிடும் காட்சிகள் அடங்கிய புரோமோ வெளியாகி உள்ளது. இதனால் இன்றைய எபிசோடில் சண்டைக்கு பஞ்சமிருக்காது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
இதையும் படியுங்கள்... பிக் பாஸ் தமிழ் சீசன் 8 : ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்ததால் பரபரப்பு