
திரைப்படங்களில் ஹீரோவுக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்கபடுகிறதோ, அதே போல் காமெடி நடிகர்களின் பங்கும் முக்கியமானது. கதையின் வேகம் குறைந்தாலும், அதனை மேனேஜ் செய்யும் திறமை காமெடி நடிகர்களுக்கு மட்டுமே உண்டு. இதன் காரணமாகவே கவுண்டமணி, நாகேஷ், சந்திரபாபு போன்ற நடிகர்கள் ஹீரோவுக்கு நிகராக சம்பளம் பெரும் நடிகர்களாக உயர்ந்தனர்.
இரண்டரை மணிநேரம் ஓடும் திரைப்படத்தில், ஒரு ஹீரோ என்ன தான் மாஸ் காட்சிகளில் நடித்து, ஆக்ஷனில் தும்சம் செய்தாலும், பக்கம் பக்கமாக வசனம் பேசி, ஹீரோயினுடன் ரொமான்ஸ் செய்தாலும்... இடையில் காமெடி தான் ஒரு படத்திற்கு முழுமையை கொண்டு வரும்.
எனவே தான் காமெடி நடிகராக இருப்பவர்கள் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் தேர்வு செய்து நடிக்கும் திறமை கொண்டவர்கள் என இயக்குனர் பாலச்சந்தர் முதல், பாரதிராஜா வரை பலர் கூறியுள்ளனர். காமெடி நடிகர்களாக அறிமுகமாகி ஹீரோவாகவும், வில்லனாகவும், தமிழ் சினிமாவில் கலக்கிய நடிகர்களும் பலர் உள்ளனர். அதே போல் விஜய், அஜித், ரஜினி, சிவகார்த்திகேயன், சூர்யா ஆகியோர் என்ன தான் ஹீரோவாக நடித்தாலும், ஒருவிதமான காமெடி சென்ஸ் அவர்களிடம் இருந்தது தான், பெரியவர்களை தாண்டி குழந்தைகள் மத்தியிலும் அவர்கள் ரீச்சாக காரணமாக அமைந்தது.
காமெடி களத்தை குறிவைத்து பல நடிகர்கள் களமிறங்கினாலும், அதில் கரை சேர்ந்தவர்கள் ஒரு சிலரே... நாகேஷ், சந்திரபாபு, செந்தில், கவுண்டமணி, விவேக், வடிவேலு, சந்தானம், சூரி என தலை சிறந்த காமெடி நடிகர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மற்ற சில காமெடி நடிகர்களான, மனோ பாலா, மயில் சாமி, ரோபோ ஷங்கர் ஆகியோர் குணசித்ர வேடத்திலும் கலக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷின் 'இட்லி கடை' படத்தில் நடிக்க 3 மடங்கு அதிக சம்பளம் வாங்கிய அருண் விஜய் - இத்தனை கோடியா?
வெற்றிவாகை சூடிய காமெடி நடிகர்களில், மிக உக்கியமானவர் யோகி பாபு. மிகக்குறுகிய காலத்தில் முன்னணி இடத்தை தக்க வைத்துக்கொண்ட யோகி பாபு, தற்போது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். பான் இந்தியா படங்களை தாண்டி ஹாலிவுட்டிலும் தற்போது கால் பதித்துள்ளார். கடந்த வாரம் தான் இவர் ஹாலிவுட் திரையுலகில் அறிமுகமாகவும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி வைரல் ஆனது.
இன்று கோடிக்கணக்கில் ஒரு படத்திற்கு சம்பளம் வாங்கும் யோகி பாபு, ஒரு காலத்தில் பல நாள் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டவர் என்பதுதான் நிதர்சனமான உண்மை. லொள்ளு சபா நிகழ்ச்சியில் தலை காட்டி, பின்னர் காமெடி நடிகராக திரைப்படங்களில் நடித்த தொடங்கினார். இவர் சினிமாவுக்கு நடிக்க வரும்போது இதெல்லாம் ஒரு மூஞ்சா? என இவரை உருவ கேலி செய்தவர்கள் பலர். ஆனால் அந்த முகம் தான், அவருக்கு மிகப்பெரிய ப்ளஸ் ஆக அமைந்து இவரை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது.
திரைப்பட விமர்சனம்: தயாரிப்பாளர் சங்கம் தொடுத்த வழக்கு ; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
காமெடியை தாண்டி கடந்த சில வருடங்களாக கதையின் நாயகனாகவும் யோகி பாபு நடித்து வருகிறார். இவர் நடிக்கும் படங்களுக்கும் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கதையின் நாயகனாக இவர் நடிக்கும் படங்களுக்கு 3 கோடி முதல் 5 கோடி வரை சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தாலும், காமெடி என்கிற காலத்தை விட்டு வெளியேறி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதால், வருடத்திற்கு ஒரு திரைப்படம் மட்டுமே கதையின் நாயகனாக நடிப்பேன் என்றும், மற்ற படங்களில் காமெடியானாகவே நடிப்பேன் என உறுதியாக உள்ளார்.
2009 ஆம் ஆண்டு அமீர் ஹீரோவாக நடித்து, சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில் வெளியான 'யோகி' என்கிற படத்தில் நடித்ததால், 'யோகி' என்கிற படமே அடையாளமாக மாறி இவரை ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் யோகி பாபு என அழைக்க துவங்கினர். பின்னர் பையா படத்தில் நடிக்க துவங்கி, வருடத்திற்கு 10 படங்களுக்கு குறையாமல் நடித்து வருகிறார். இந்த ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் அயலான், தூக்குதுரை, லோக்கல் சரக்கு, சைரன், யாவரும் வல்லவரே, பூமரங்கள், ரோமியோ, ரத்தினம், அரண்மனை 3, டீன்ஸ் , கோட் என ஏராளமான படங்கள் வெளியாகின. மேலும் கஜானா, மெடிக்கல் மிராக்கில், மலை போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.
விஜய் டிவி 'ஆஹா கல்யாணம்' சீரியலில் சம்பள விஷயத்தில் ஹீரோக்களை மிஞ்சிய ஹீரோயின்ஸ்! முழு விவரம்!
யோகி பாபுவுக்கு சொந்தமாக சென்னையில் பிரமாண்டமான வீடு ஒன்று உள்ளது. சில சொகுசு ஃபிளாட் வைத்துள்ளதாகவும் கூறுகிறார்கள். அதே போல் சொந்த ஊரான ஆரணியில் பண்ணை வீடு மற்றும் ஏராளமான இடங்களை வாங்கி வைத்துள்ளார். ஊர் மக்களுக்காக கோவில் ஒன்றையும் தன்னுடைய இடத்திலேயே கட்டி கொடுத்துள்ளார். யோகி பாபு அஜித்தை போல் பலருக்கு வெளியே சொல்லாமல் உதவிகளை செய்து வருகிறார்.
பிஎம்டபிள்யூ, ஆடி, என சில சொகுசு கார்களை வைத்திருக்கும் யோகி பாபுவுக்கு... காமெடி நடிகராக நடிக்க ஒர ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளமாக வாங்குகிறார். இதுவே கதையின் நாயகனாக நடிக்க 3 கோடி முதல் 5 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். இவருடைய மொத்த சொத்து மதிப்பு 50 கோடியில் இருந்த 70 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.