கூலி படத்தில் ஸ்ருதிஹாசன் மட்டுமே நாயகியாக நடித்துவருவதாக கூறப்பட்ட நிலையில், அதில் மற்றொரு நடிகையையும் சர்ப்ரைஸாக நடிக்க வைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அந்த நடிகை யார் என்கிற தகவல் லீக் ஆகி உள்ளது. அவர் வேறுயாருமில்லை பிகில் படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்திருந்த ரெபா மோனிகா ஜான் தான் தற்போது ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்கிற தகவல் கசிந்துள்ளது.