தமிழ் திரையுலக ரசிகர்களை அதிரவைத்த 7 பிரபலங்களின் விவாகரத்து!

First Published | Dec 4, 2024, 6:32 PM IST


பல நட்சத்திர ஜோடிகள் திருமணமான சில வருடங்களுக்குப் பிறகு கருத்து வேறுபாடுகளால் பிரிந்துள்ளனர். சமந்தா-நாக சைதன்யா முதல்  தனுஷ்-ஐஸ்வர்யா வரை.. விவாகரத்து செய்த தென்னிந்திய பிரபலங்களின் பட்டியல் பெரியது!

Dhanush - Aishwarya Rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை, நடிகர் தனுஷ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். 18 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு 2022ல் பிரிவதாக அறிவித்தனர். இருவரும் கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களின் மகன்கள் அவர்களின் விருப்பம் போல் தந்தை மற்றும் தாயுடன் மாறி மாறி வசித்து கொள்ளலாம் என நீதிமன்றம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

Samantha - Naga Chaitanya

சமந்தா - நாக சைதன்யா ஜோடி திருமணமான 4 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களின் விவாகரத்தை அறிவித்தனர். இந்த நட்சத்திர ஜோடியின் விவாகரத்து அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 2021ல் அதிகாரப்பூர்வமாக பிரிவதாக சமூக ஊடகங்கள் வழியாக அறிவித்தனர். நாக சைதன்யா, இன்று (டிசம்பர் 4)  நடிகை ஷோபிதாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார்.

தன்மானத்தை சீண்டிய கண்ணதாசன்! மனைவியின் செயல்; பூரித்து போன நாகேஷ்!


Amala Paul - AL Vijay

அமலா பால், ஏ.எல். விஜய் விவாகரத்து தமிழ் திரையுலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயங்களில் ஒன்று. விஜய் - அமலா பால் பிரிவுக்கு காரணம் விஜயின் குடும்பத்தினர் என கூறப்படுகிறது. அமலா பாலுக்கு அவருடைய வீட்டில் விதித்த கட்டுப்பாடுகளை மீறியதால்... ஒருகட்டத்தில் இருவரும் பிரிவதே சிறந்தது என்கிற முடிவை எடுத்தனர். இருவருமே தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, தங்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். 

Dilip - Manju Warrier

திலீப், மஞ்சு வாரியர் காதல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பரஸ்பர புரிதலுடன் பிரிந்தனர். திலீப்பின் ரசிகர்கள் மஞ்சு மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதன் பின்னர் மஞ்சுவாரியர் - திலீப் பிரிவுக்கு காரணம் காவியா மாதவன் திலீப் இடையே இருந்த உறவு என்பது தெரிய வந்தது.

சோத்துக்கு வழி இல்லாமல் பல நாள் பட்டினி; உருவ கேலிக்கு ஆளான காமெடி நடிகர் யோகி பாபுவின் சொத்து மதிப்பு!

Pawan Kalyan and Renu Desai

நடிகர் பவன் கல்யாண் 2012ல் தனது மனைவி ரேணு தேசாய்க்கு விவாகரத்து அளித்தார். அவரது ரசிகர்களை இந்த நிகழ்வு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பவன் மூன்றாவது திருமணமாக அன்னா லெஜினோவாவை திருமணம் செய்து கொண்டார். 

Soundharya Rajinikanth and Ashwin

சௌந்தர்யா ரஜினிகாந்த் கணவர் அஷ்வின் ராம் குமாருடன் 2017ல்  பிரிந்தார்.  7 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பின்னர் சௌந்தர்யா இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். 

'LIK 'படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்த மாஸ் ஹீரோ! பிரதீப் உள்ளே வந்தது எப்படி தெரியுமா?

Nagarjuna And Lakshmi

நாகார்ஜுனா, லட்சுமி 1984ல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 1990ல் விவாகரத்து பெற்றனர். இவர்கள் நாக சைதன்யாவின் பெற்றோர். லட்சுமி  யுடன் பிரிந்த பிறகு நடிகை அமலாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அகில்  என்கிற மகன் உள்ளார்.

AR Rahman And Saira Banu

மூன்று தசாப்த கால திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், மனைவி சாய்ரா பானுவுடன் பிரிவதாக அறிவித்தார். 1995 மார்ச் 12 அன்று திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்: கதீஜா, ரஹீமா, ஏ.ஆர். அமீன் இவர்களது பெயர்கள். மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில், கடந்த மாதம் இருவரும் பரஸ்பரமாக பிரிய உள்ளதாக அறிவித்தனர்.

நெப்போலியன் கட்டியுள்ள மயோபதி மருத்துவமனை குழந்தைகளுக்கு நடிகர் கார்த்தி செய்த உதவி!

Latest Videos

click me!