Parandur Airport : பரந்தூரில் அமையும் 2வது விமானநிலையம்!

Parandur Airport : பரந்தூரில் அமையும் 2வது விமானநிலையம்!

Published : Aug 20, 2022, 08:45 PM IST

சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள பரந்தூரில் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 

சென்னை மீனம்பாக்கத்தில் அண்ணா பன்னாட்டு விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 2-வது விமான நிலையம் ஒன்றை அமைக்கும் முயற்சிகள் கடந்த சில ஆண்டுகளாக முன்னெடுக்கபட்டு வருகின்றன. இந்நிலையில்,
சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள பரந்தூரில் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக பரந்தூரில் 4,791 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்கும் என்றும், மக்களுக்கும், சுற்றுவட்டார நிலம் மற்றும் நிலத்தடி நீராதாரங்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் கையகப்படுத்தப்படும் என தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

பரந்தூர், சென்னையின் மையப்பகுதியான எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 68.5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. புதிய விமான நிலையத்திற்கு சாலை மார்க்கமாக 2 மணிநேரம் 20 நிமிடங்களில் செல்லாம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

03:38தூத்துக்குடி துறைமுகப் பகுதியில் கடல் சீற்றம்: எழும் அலைகளால் பரபரப்பு !
06:48கைத்தறி பொருட்களை உலகளவில் சந்தைப்படுத்த நடவடிக்கை : கோவையில் அமைச்சர் விஜயா பாலாஜி உறுதி!
03:18திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இசையமைப்பாளர் அனிருத் சிறப்புத் தரிசனம் !
09:48மாலை 6 முதல் இரவு 12 மணி வரை....மின்சார கொள்முதல் டெண்டர் குறித்து சி.டி.ஆர் நிர்மல் குமார் விளக்கம்
02:51எழும்பூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 'மக்கள் அதிகாரம்' அமைப்பினர் அதிரடி கைது!
05:55அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறி : 15 நிர்வாகிகள் விலகல் குறித்து செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!
06:43திமுக ஆட்சியில் சொந்த மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது": சென்னையில் செந்தில் பாலாஜி பேட்டி!
04:5421 தற்காலிக செவிலியர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்!
06:11சென்னையில் திமுக மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் எழிலன் நாகநாதன் செய்தியாளர்கள் சந்திப்பு!
08:19ஜனநாயகப் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் : AISF, AIYF அமைப்பினர் கருப்புத் துணியுடன் பேரணி!