vuukle one pixel image

ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கன மழை!!

Dhanalakshmi G  | Published: Sep 26, 2022, 10:41 AM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில்  கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். நேற்றுக் காலை வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இரவு நேரத்தில் வெப்ப சலனம் காரணமாக  ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் என்று பெய்த கனமழையின் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.