
Gold and Silver Rate in Delhi : தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கங்களை கண்டு வருகிறது. இதற்கு அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தக போரும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. டெல்லியில் கிராம் ஒன்றிற்கு ரூ.9810க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவே 10 கிராம் ரூ.1650 வீதம் அதிகரித்து ரூ.98,100க்கு விற்பனை செய்யப்படுகிறது. 99.9 சதவீத தூய உலோகம் 10 கிராமுக்கு ரூ.96,450ஆக இருந்தது.
இதே போன்று தூய தங்கத்தின் விலையில் ரூ.1650 வீதம் அதிகரித்து ரூ.97,650க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவே முந்தைய நாளில் ரூ.96,000க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போன்று தான் வெள்ளி விலையிலும் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, வெள்ளி கிலோவிற்கு ரூ.1900 அதிகரித்து ரூ.99,400க்கு விற்பனையாகிறது.
G Pay, PayTM, Phonepe ,UPI-ல் பணம் அனுப்ப சிக்கலா? சரி செய்ய 5 எளிய வழிகள்
ஸ்பாட் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றிற்கு 3,318 அமெரிக்க டாலர் அதிகரித்திருந்த நிலையில் அது அவுன்ஸ் ஒன்றிற்கு டாலர் மதிப்பில் 3,299.99 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கம் காணப்பட அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தக போர் தான் காரணமாக சொல்லப்படுகிறது. கனிமங்களுக்கு வரி விதிப்பு அவசியமா என்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு அமெரிக்கா 245 சதவிகித வரிகளை அதிகரித்துள்ளது.
தங்கப் பத்திரங்களை விற்க சரியான நேரம்! எவ்வளவு லாபம் கிடைக்கும்?
அமெரிக்க டாலர் குறியீட்டு எண் சரிந்து வரும் நிலையில் தங்கத்தின் விலையில் மேலும் மாற்றங்கள் ஏற்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.