Indian Stock Market Today: இந்திய பங்குச் சந்தையில் கரடியை முட்டித் தள்ளும் காளை; காரணங்கள் என்ன?

இன்றைய பங்குச் சந்தையில் நிப்டி 969 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது. அமெரிக்க டாலரின் வீழ்ச்சி மற்றும் ரிசர்வ் வங்கியின் பணவீக்கம் குறித்த கணிப்பு சந்தை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.

Reason behind Indian Stock market Nifty, sensex jump US Market Dollar, Inflation US Bond

Stock Market Today: இன்றைய பங்குச் சந்தையில் நிப்டி 969 புள்ளிகள் ஏற்றத்தைப் பதிவு செய்தது. பிஎஸ்இ சென்செக்ஸ் 76,852 புள்ளிகளில் தொடங்கி இன்ட்ராடே வர்த்தகத்தில் 76,907 புள்ளி என்ற உச்சத்தை எட்டியது. இன்றைய வர்த்தகத்தின் ஊடே உச்சங்களை எட்டிய அதே வேளையில், 30 பங்கு குறியீடு 1,750 புள்ளிகள் அதிகரித்தது. இரண்டு தொடர்ச்சியான வர்த்தக நேர அமர்வுகளில் 3,000 புள்ளிகளுக்கு மேல் அதிகரிப்பையும் பதிவு செய்தது. உலக நாடுகளில் இந்திய பங்குச் சந்தித்தான் மிகவும் விரைவாக இழப்பில் இருந்து மீண்டு வந்துள்ளது.

வங்கி நிப்டி குறியீடு:
இன்று, வங்கி நிஃப்டி குறியீடு 52,299 புள்ளிகள் உயர்ந்து 52,386 என்ற இன்ட்ராடே உயர்வைத் தொட்டது, இது இன்ட்ராடேயில் கிட்டத்தட்ட 1,400 புள்ளிகள் அதிகரிப்பை பதிவு செய்தது. இந்த இன்ட்ராடே உச்சத்தை எட்டிய அதே வேளையில், பேங்க் நிஃப்டி குறியீடு இரண்டு தொடர்ச்சியான அமர்வுகளில் கிட்டத்தட்ட 2,150 புள்ளிகள் உயர்வைப் பதிவு செய்தது.

Latest Videos

Mumbai Share Market Small cap:
இன்றைய பங்குச் சந்தை உயர்வில் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளின் மீது முதலீடு செய்வது காணப்பட்டது. இன்று காலை (செவ்வாய்க்கிழமை) Mumbai Share Market Small cap குறியீடு சுமார் 2% உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் Mid cap குறியீடு கிட்டத்தட்ட 1.65% உயர்ந்தது.

52 வார உயர்வைத் தொட்ட பங்குகள்:
இன்று {செவ்வாய்க்கிழமை) மதியம் 12:00 மணிக்கு, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 485 பங்குகளில் 341 பங்குகளுக்கு மேல் Upper Circuit சென்றது. 144 பங்குகள் lower Circuitடில் முடிந்தது. Mumbai Share Market- டில் பட்டியலிடப்பட்ட 70 பங்குகள் 52 வார உயர்வைத் தொட்டன. அதே நேரத்தில் Mumbai Share Market-யில் பட்டியலிடப்பட்ட 38 பங்குகள் 52 வார குறைந்த அளவைத் தொட்டன.

Shares To Buy Today : இன்று வாங்க வேண்டிய பங்குகள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ!

இந்திய பங்குச் சந்தை இன்று ஏன் உயர்கிறது?
அமெரிக்க அதிபரின் வரி உயர்வுக்குப் பின்னர் ஏப்ரல் மாத குறைந்த விலையிலிருந்து S&P  500 - 9% உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதக் குறைந்த விலையிலிருந்து நிஃப்டி 3% மட்டுமே உயர்ந்துள்ளது. இன்னும்  நிப்டிவர்த்தக உச்சத்தை எட்ட வேண்டியது இருக்கிறது. நிப்டி தொடர்ந்து முன்னேறி வருகிறது. மேலும் சில குறுகிய கால முதலீடுகள் இன்றைய  சந்தையை  வலுவானதாக வைத்திருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 

இந்திய பங்குச் சந்தை உயர்வுக்கு காரணங்கள் என்ன?
டிரம்பின் வரிக் கொள்கையில் எதிர்பாராத திருப்பத்திற்குப் பிறகு இந்திய பங்குச் சந்தை உயர்ந்து வருகிறது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்க பங்குச் சந்தையைத் தொடர்ந்து US Bond Market நிலவரம், மற்ற நாடுகளுடன் அமெரிக்கா நடத்தி வரும் வர்த்தக பேச்சுவார்த்தை, அமெரிக்க டாலரின் மதிப்பிழப்பு, டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க பெடரல் தலைவரின் மாறுபட்ட கருத்துக்கள், இந்திய பணவீக்கம் குறித்த ரிசர்வ் வங்கியின் நம்பிக்கை ஆகியவை கடந்த இரண்டு நாட்களாக இந்திய பங்குச் சந்தை பாசிடிவ் ஆக செல்வதற்கு வழி வகுத்துள்ளது என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

டிரம்ப்பின் பதில் வரி பற்றி கவலையே வேண்டாம்! பாதிப்பு 0.1% மட்டும்தான்!

US Stock market Crash: 
அமெரிக்காவின் bond Market-ம், அமெரிக்க பங்குச் சந்தையும் எதிர் எதிர் திசைகளில் வர்த்தகம் செய்கின்றன. அதிபர் டிரம்ப் வரிகளை விதித்த பின்னர் இந்த இரண்டு சந்தைகளும் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்தன. அமெரிக்காவின் 47வது அதிபராக  டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, சீனா மற்றும் பிற நாடுகள் அவரது வரிகளை மனதில் கொண்டு அமெரிக்க பத்திரங்களை வாங்கி குவித்தனர். டிரம்பின் வரிகள் அறிவிப்பை அடுத்து, இந்த நாடுகள் அமெரிக்க பத்திரங்களை விற்கத் தொடங்கின. இது அமெரிக்க பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. 

வர்த்தகப் போருக்கு முற்றுப்புள்ளி:
அமெரிக்க அதிபரின் வரி உயர்வால் பல நாடுகளின் வர்த்தகமும் பாதிக்கப்படும் அதேவேளையில் அமெரிக்காவின் வர்த்தகமும் அதிகளவில் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது என்பதால், 90 நாட்கள் இடைவெளியை டிரம்ப் அறிவித்து இருக்கிறார். இந்த நாட்களில் உறவு நாடுகளுடன் வரி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் ஏற்பட வாய்ப்புள்ளது என்ற பாசிடிவ் சிந்தனையும் இந்திய சந்தையில் எதிரொலித்துள்ளது.

அமெரிக்க டாலரின் வீழ்ச்சி:
டிரம்பின் வரி உயர்வு அறிவிப்பை அடுத்து, அமெரிக்க டாலரின் மதிப்பும் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது. அமெரிக்காவின் அனைத்து வர்த்தகமும் அதாவது கருவூல வருமானம், ஈகுவிட்டி, டாலர் ஆகியவற்றின் மீது அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால், அமெரிக்க முதலீட்டாளர்கள் தங்களது கவனத்தை Mumbai Stock Market, Sensex, Nifty மீது திருப்பியுள்ளனர். தங்களது முதலீட்டை அதிகரித்துள்ளனர். US bond,Equity, Currency மீதான தங்களது கவனத்தை அமெரிக்க முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையின் மீது திருப்பியுள்ளனர்.

Optimistic RBI inflation;
இந்திய ரிசர்வ் வங்கி 2025-2026 ஆம் ஆண்டுக்கான இந்திய பணவீக்கத்தை 4 சதவீதமாக கணித்துள்ளது. ஒவ்வொரு காலாண்டுக்கும் தனித்தனியாக கணிப்பை வெளியிட்டு இருந்தது. அதாவது முதலாவது காலாண்டில் 3.6%, இரண்டாவது காலாண்டில் 3.9%, மூன்றாவது காலாண்டில்  3.8%,  நான்காவது காலாண்டில் 4.4% ஆக இருக்கும் என்று கணித்துள்ளது. இதுவும் இந்திய பங்குச் சந்தையில் பாசிடிவ்வான எண்ணத்தை உருவாக்கியுள்ளது. 

ஆட்டோ துறை வரி; டிரம்ப் சூசகம்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆட்டோ வரிகளில் நெகிழ்வுத்தன்மை இருக்கும் என்று சூசமாக தெரிவித்து இருப்பதை அடுத்து ஆட்டோ பங்குகளும் இன்று நன்றாக லாபத்தை கொடுத்தது. இதன் பிரதிபலிப்பு பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. இன்னும் உயர் தொழில்நுட்ப பொருட்களின் மீது வரி சுமத்தப்படுமா? மருத்துவம் சார்ந்த பொருட்களின் மீது வரி விதிக்கப்படுமா என்ற சூழலில் ஆட்டோ மீதான டிரம்பின் சூசக பேச்சு கொஞ்சம் ஆறுதலாக உள்ளது.

vuukle one pixel image
click me!