பெங்களூர் வாசிகளின் வீட்டு வாசலில் மாம்பழம் டெலிவரி செய்யும் இந்திய தபால் துறை!!

Published : Apr 16, 2025, 09:24 PM IST
பெங்களூர் வாசிகளின் வீட்டு வாசலில் மாம்பழம் டெலிவரி செய்யும் இந்திய தபால் துறை!!

சுருக்கம்

கர்நாடக மாநில மாம்பழ வளர்ச்சிக் கழகம் மற்றும் இந்திய அஞ்சல் துறை இணைந்து பெங்களூரு வாசிகளுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்ட மாம்பழங்களை வீட்டுக்கே டெலிவரி செய்கிறது. விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு மாம்பழங்கள் டெலிவரி செய்யப்படுவதால், இடைத்தரகர்கள் இல்லை, ரசாயனம் இல்லாத தரமான மாம்பழங்களைப் பெறலாம்.

Postal department delivery mango Bengaluru: மாம்பழம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்கும். சரியாக ஏப்ரல், மே மாதங்களில் சீசன் துவங்குவதற்கு முன்பே சந்தையில் மாம்பழம் எப்படியும் கிடைத்து விடும். ஆனால், இந்த முறையும் பெங்களூர் வாசிகளின் வீட்டுக்கே மாம்பழம் டெலிவரி செய்யப்படுகிறது. எப்படி என்று பார்க்கலாம்.

பெங்களூருவில் தபால்துறை மாம்பழம் டெலிவரி 
பழங்களின் ராஜா மாம்பழம் என்று கூறுவது உண்டு. முன்பு தபால்காரர் தபால் தான் கொண்டு வருவார். தற்போது கர்நாடகா மக்களின் வீட்டு வாசலுக்கே மாம்பழம் டெலிவரி செய்யப்படுகிறது.  இந்திய அரசின் தபால் துறை மாம்பழ சந்தையில் நுழைந்துள்ளது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், பல்வேறு வகையான மாம்பழங்களை ஆன்லைனில் முன்பதிவு செய்தால் போதும், தபால்காரர் உங்கள் வீட்டு வாசலில் மாம்பழங்களை டெலிவரி செய்து விடுவார்.

கர்நாடக மாநில மாம்பழ வளர்ச்சிக் கழகம்:
கடந்த ஆண்டுகளில் செய்தது போலவே, இந்த ஆண்டும், கர்நாடக மாநில மாம்பழ வளர்ச்சி மற்றும் சந்தைப்படுத்தல் கழகம் மற்றும் விவசாயிகளின் வலைத்தளங்களில் முன்பதிவு செய்யப்பட்ட மாம்பழங்களை இந்திய அஞ்சல் துறை வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலில் கொண்டு சேர்க்கிறது.  இந்த மாம்பழ விநியோக சேவை ஏப்ரல் 7 ஆம் தேதி முதலே பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்ய வாடிக்கையாளர்கள் மாம்பழ மேம்பாட்டுக் கழகத்தின் இணையத்தை பார்வையிட வேண்டும். 

இவங்க மறந்து கூட மாம்பழம் சாப்பிடக் கூடாது...சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

மாம்பழம் இணையத்தில் முன்பதிவு 
இணையத்தில் விரும்பும் மாம்பழம் வகைகளை ஆர்டர் செய்யலாம். இவ்வாறு முன்பதிவு செய்யப்படும் பழங்கள் விவசாயிகளிடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக வழங்கப்படும். ஒரு பெட்டியில் 3.5 கிலோ மாம்பழம் இருக்கும். பார்சல் கட்டணத்துடன் சேர்த்து தபால் துறை ரூ.82 வசூலிக்கும். ஒவ்வொரு மாம்பழ வகைக்கும் ஏற்ப விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ராமநகரா, சிக்கபல்லாபூர் மற்றும் கோலார் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளிடமிருந்து தபால் மூலம் மாம்பழங்கள் பெங்களூருவில் உள்ள வாடிக்கையாளர்களைச் சென்றடையும். 2019 முதல், பெங்களூரு GPO அல்லது பெங்களூரு தபால் நிலையத்திலிருந்து 1 லட்சத்திற்கும் அதிகமான மாம்பழப் பெட்டிகள் பார்சல் செய்யப்பட்டுள்ளன.

கோடையில் ரசிக்க வேண்டிய 5 சுவையான மாம்பழ பானங்கள்!

இடைத்தரகர்கள் இல்லை:
இதன் மூலம் அஞ்சல் துறைக்கு ரூ.83 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. இந்த அஞ்சல் சேவை மூலம் வாடிக்கையாளர்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக மாம்பழங்களை வாங்கலாம். எந்த இடைத்தரகர்களும் ஈடுபட மாட்டார்கள். ரசாயனங்கள் இல்லாத தரமான மாம்பழங்களைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. நிறுவனத்தின் வலைத்தளமான www.karsirimangoes.karnataka.gov.in என்ற இணையத்திற்கு சென்று மாம்பழம் வாங்குவதற்கு பதிவு செய்யலாம்.

மொபைலுக்கு குறுஞ்செய்தி:
பதிவுசெய்யப்பட்ட விவசாயிகளால் விற்கப்படும் பழங்கள் மற்றும் விலைகள் பற்றிய தகவல்களை நீங்கள் பெறலாம். வாடிக்கையாளர்கள் அதைக் கிளிக் செய்வதன் மூலம் தங்களுக்குத் தேவையான பழத்தைத் தேர்ந்தெடுக்கலாம். கட்டணம் ஆன்லைனில் செலுத்தப்பட வேண்டும் (தபால் உட்பட). முன்பதிவு செய்தவுடன், மின்னஞ்சல் மற்றும் மொபைலுக்கு ஒரு செய்தி அனுப்பப்படும்.

முன்பதிவு தகவல் அஞ்சல் துறைக்கும் விவசாயிகளுக்கும் அனுப்பப்படும். முன்பதிவு செய்த 2-3 நாட்களுக்குள் தபால்காரர் மாம்பழங்களை உங்கள் வீட்டு வாசலில் டெலிவரி செய்து விடுவார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!