
இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா புதன்கிழமை அடுத்த தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான நீதிபதி பி.ஆர். கவாய் பெயரைப் பரிந்துரைத்துள்ளார். நீதிபதி கவாய் மே 14 அன்று 52வது தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புதிய தலைமை நீதிபதிக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் 65 வயதை எட்டியபோது ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமை நீதிபதியாக நவம்பர் 2024 இல் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார். மே 13ஆம் தேதி தற்போதை ஓய்வு பெற இருக்கிறார்.
பூஷன் ராமகிருஷ்ணா கவாய் நவம்பர் 24, 1960 அன்று அமராவதியில் பிறந்தார். அவர் மார்ச் 16, 1985 அன்று வழக்கறிஞர் சங்கத்தில் சேர்ந்தார். நீதிபதி பி.ஆர். கவாய் நவம்பர் 12, 2005 அன்று உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியானார். அப்போதிருந்து, அவர் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் பல அரசியலமைப்பு அமர்வுகளில் அங்கம் வகித்துள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் மீது ED குற்றப்பத்திரிகை தாக்கல்
2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவை ரத்து செய்வதற்கான மத்திய அரசின் முடிவை ஒருமனதாக உறுதி செய்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் நீதிபதி கவாய் அவர்களும் உறுப்பினராக இருந்தார்.
அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்த மற்றொரு ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்விலும் நீதிபதி கவாய் முக்கிய பங்கு வகித்தார்.
2016ஆம் ஆண்டு 1,000, 500 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்தது தொடர்பான வழக்கில் 4:1 என்ற பெரும்பான்மையுடன் மத்திய அரசின் நடவடிக்கையை அங்கீகரித்து தீர்ப்பு வழங்கிய அமர்விலும் நீதிபதி கவாய் இடம்பெற்றிருந்தார்.
மாநிலங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்காக பட்டியலிடப்பட்ட சாதிகளுக்குள் துணை வகைப்பாடுகளை உருவாக்க அரசியல் சாசன ரீதியான அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பளித்த ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விலும் நீதிபதி கவாய் இருந்தார். அந்த வழக்கில் 6:1 பெரும்பான்மையுடன் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
உலகிலேயே அதிகம் வெறுக்கப்படும் நாடு சீனா! டாப் 10 இல் இந்தியாவும் இருக்கு!