வரி அதிகரிப்பைத் தவிர்க்க ஆப்பிள் மார்ச் மாதத்தில் இந்தியாவிலிருந்து கிட்டத்தட்ட 22 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐபோன்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது. ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா போன்ற முக்கிய விநியோகஸ்தர்கள் மூலம் இந்த ஏற்றுமதி நடந்துள்ளது.
Apple exported 22 billion dollar Iphones from India: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிகளை தவிர்க்கும் விதமாக ஆப்பிள் நிறுவனம் முக்கிய இந்திய விநியோகஸ்தர்களான ஃபாக்ஸ்கான் மற்றும் டாடாவிடம் இருந்து மார்ச் மாதத்தில் கிட்டத்தட்ட 22 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐபோன்களை அமெரிக்காவிற்கு அனுப்பியது,. இது இதுவரை இல்லாத அளவுக்கு அதிக ஏற்றுமதியாகும்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு 600 டன் ஐபோன்கள்
ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை அதிகரித்தது. இதன் மூலம் 600 டன் ஐபோன்களை அமெரிக்காவுக்கு கொண்டு சென்றது. இதற்குக் காரணம் டிரம்பின் வரிக் கொள்கைக்கு பயந்து இந்த மாதிரி குருகியா காலத்தில் அதிக உற்பத்தி செய்து ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது. டிரம்பின் வரிக் கொள்கை அமலுக்கு வந்தால், கட்டணங்கள் அதிகரிக்கும் என்ற காரணத்தால் ஆப்பிள் நிறுவனம் இதை செய்துள்ளது.
சீனாவின் மீதான தாக்கம் இந்தியாவுக்கு ஆதாயம்:
அமெரிக்க அரசு நிர்வாகம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஏப்ரல் மாதத்தில் இருந்து 26% வரிகளை விதித்தது. சீனாவுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு. சீனா மீது அமெரிக்கா 104% வரியை விதித்தது. அதாவது, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சீன தயாரிப்புகளின் மீது 104% வரி விதிக்கப்படும். இது சீன உற்பத்தியை பெரிய அளவில் பாதிக்கும் என்ற அச்சம் எழுந்தது. ஆனால், சீனாவைத் தவிர, பெரும்பாலான நாடுகளின் மீதான் வரியை மூன்று மாதங்களுக்கு டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். இந்த கால இடைவெளியில் நாடுகளுடன் பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் செய்யப்படும் என்று நம்பப்படுகிறது.
சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு அவசர அவசரமாக பறந்த 600 டன் ஐபோன்கள்! ஏன் தெரியுமா?
மார்ச் மாதத்தில் அதிகரித்த ஏற்றுமதி:
ஆப்பிளின் முக்கிய இந்திய விநியோகஸ்தரான ஃபாக்ஸ்கான், கடந்த மார்ச் மாதத்தில்1.31 பில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்தது. இது ஒரு மாதத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சம். மேலும், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கான ஏற்றுமதிக்கு சமம் என்று சுங்கத்துறையில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராய்டர்ஸ் செய்தி நிறுவனமும் இதை உறுதி செய்துள்ளது.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிகரித்த ஃபாக்ஸ்கான் ஏற்றுமதி:
இதில் ஆப்பிள் ஐபோன் 13, 14, 16 மற்றும் 16e மாடல்களும் அடங்கும். இத்துடன், நடப்பாண்டில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஃபாக்ஸ்கானின் மொத்த ஏற்றுமதி 5.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அதே மார்ச் மாதத்தில் மற்றொரு ஆப்பிள் விநியோகஸ்தரான டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 612 மில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது முந்தைய மாதத்தை விட சுமார் 63% அதிகமாகும். மேலும் ஐபோன் 15 மற்றும் 16 மாடல்களும் இதில் அடங்கும்.
ஐபோன் 17: அதே தோற்றம், 2027 வடிவமைப்பு புரட்சிக்கு காத்திருப்பு!
சென்னை ஏர் கார்கோ முனையம்:
சென்னை ஏர் கார்கோ முனையத்திலிருந்து மார்ச் மாதம் விமானம் மூலம் அனுப்பப்பட்ட இந்த ஐபோன்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயார்க் உட்பட பல்வேறு இடங்களில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதில் சிகாகோ நகரில் தான் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஐபோன்கள்:
தாமதமாக, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன்களுக்கு அதிக வரிகளில் இருந்து விலக்கு அளிப்பதாக டிரம்ப் அறிவித்து இருந்தார். ஆனால், இந்த விலக்கும் குறுகிய காலத்திற்கானது என்று அறிவித்துள்ளார். ஏற்றுமதிகளை விரைவுபடுத்த, தென் மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள சென்னை விமான நிலையத்தில் சுங்கச்சாவடிகளை அகற்ற தேவையான நேரத்தை 30 மணி நேரத்திலிருந்து ஆறு மணி நேரமாகக் குறைக்க இந்திய விமான நிலைய அதிகாரிகளிடம் ஆப்பிள் நிறுவனம் வலியுறுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.