Asianet Tamil | Published: Feb 17, 2023, 11:00 AM IST
விருதுநகர் அருகே வலையப்பட்டியில் பத்மநாபன் என்பவருக்கு சொந்தமான ராஜஸ்ரீ தீப்பெட்டி ஆலை செயல்பட்டு வருகிறது. இன்று தீப்பெட்டி உற்பத்தியின் போது வெளியான ரசாயன மருந்து கழிவுகளை தீப்பெட்டி ஆலைக்கு வெளியே தீயிட்டு எரித்த போது அந்த பணியில் இருந்த கூத்திப்பாறையைச் சேர்ந்த முருகன் (வயது 55)என்ற தொழிலாளி மீது தீப்பற்றி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.