கூட்டணி உறுதியான குஷியில் அமித்ஷா, அண்ணாமலைக்கு விருந்து அளித்த இபிஎஸ்!

Published : Apr 11, 2025, 06:53 PM ISTUpdated : Apr 11, 2025, 07:01 PM IST

அதிமுக-பாஜக கூட்டணி உறுதியான குஷியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வீட்டில் அமித்ஷா, அண்ணாமலைக்கு இரவு விருந்து அளித்தார்.

PREV
14
கூட்டணி உறுதியான குஷியில் அமித்ஷா, அண்ணாமலைக்கு விருந்து அளித்த இபிஎஸ்!

EPS hosted a dinner for Amit Shah and Annamalai at his residence: தமிழ்நாட்டில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. மத்தியில் ஆளும் பாஜக தமிழ்நாட்டில் இந்த முறை கணிசமான இடங்களை கைப்பற்ற தீவிரமாக உள்ளது. இதனால் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதில் பாஜக தீவிர முயற்சி எடுத்தது. சில நாட்களுக்கு முன்பாக எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில், அதிமுக, பாஜக கூட்டணி பேச்சு பலமாக அடிப்பட்டது.

24
AIADMK-BJP alliance in 2026 Tamil Nadu assembly election

இந்நிலையில், 2 நாள் பயணமாக சென்னை வந்துள்ள அமித்ஷா, 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் முன்னிலையில் அமித்ஷா இதை அறிவித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, ''2026 சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவும், பாஜகவும் இணைந்து தேர்தலை சந்திக்கும். 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சி தான் இருக்கும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் இந்த கூட்டணி இருக்கும். அதிமுகவே கூட்டணிக்கு தலைமை தாங்கும்.  அதிமுக, பாஜக கூட்டணி இருவருக்குமே பலன் அளிக்கக்கூடியது. யார், யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து பின்பு பேசி முடிவு எடுக்கப்படும். அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிடப்போவதில்லை'' என்றார்.

தமிழ்நாடு 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி! அமித் ஷா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

34
AIADMK-BJP alliance

மேலும் பேசிய அமித்ஷா, பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிமுக எந்தவித நிபந்தனையும் வைக்கவில்லை என்றும் இது ஒரு வலுவான பலமான கூட்டணி என்றும் தெரிவித்தார். சில மாதங்களுக்கு முன்பே அதிமுக, பாஜக கூட்டணி அமைக்கும் என தகவல் வெளியாகி இருந்த நிலையில், இப்போது அமித்ஷாவும், இபிஎஸ்ஸும் இதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

44
Amit Shah, EPS, Annamalai

2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணி உறுதியான குஷியில் அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள தனது வீட்டில் இரவு விருந்து அளித்தார். இதற்காக அமித்ஷா கிண்டியில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் இருந்து கார் மூலம் இபிஎஸ் வீட்டுக்கு சென்றார். மேலும் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவராகும் நயினார் நாகேந்திரன் ஆகியோரும் இபிஎஸ் வீட்டுக்கு சென்றனர். இவர்கள் உள்பட அதிமுக, பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுக்கும் இபிஎஸ் இரவு விருந்து அளித்துள்ளார்.

இபிஎஸ் வீட்டில் சுமார் 45 நிமிடங்கள் இருந்த அமித்ஷா, அவருடன் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வெற்றிகரமாக கூட்டணி அமைத்த அமித்ஷா, இபிஎஸ் வீட்டில் இருந்து கிளம்பி டெல்லி புறப்பட்டு சென்றார். 

5 பேரை தாண்டி நயினார் நாகேந்திரன் பாஜக தலைவராவது எப்படி? பின்னணி காரணம் இதுதான்!
 

Read more Photos on
click me!

Recommended Stories