பாலிவுட் நடிகை தபு ஹீரோயினாக நடிக்கிறார்:
இந்த படத்தில், விஜய் சேதுபதி இதுவரை எவரும் பார்த்திராத ஒரு மாறுபட்ட வேடத்தில் நடிக்க உள்ளாராம். மேலும் உணர்வுப்பூர்வமான கதை களத்தில் உருவாகும் இந்த படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை தபு ஒப்பந்தமாகியுள்ளார். தனித்துவமான கதைத் தேர்வுகளுக்கு பெயர் பெற்ற தபு, இப்படத்தின் கதாபாத்திரத்தாலும், அழுத்தமான கதைக்களத்தாலும் உடனடியாக ஈர்க்கப்பட்டு இப்படத்தில் நடிக்க, உடனடியாக ஒப்புக்கொண்டுள்ளார். இவர் தமிழில் நடித்து பல வருடங்கள் ஆகும் நிலையில்... இந்த படத்தின் கதையை கேட்டதும் உடனே நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ளது. கூடிய விரைவில் இப்படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வில்லங்கமான இயக்குனரின் படத்தில் வில்லனாக நடிக்கப்போகிறாரா விஜய் சேதுபதி?