'கார்த்திகை தீபம்' சீரியலின், நேற்றைய எபிசோடில் அபிராமி வீட்டிற்கு வந்து கார்த்திக் - ரேவதியை ஆசிர்வாதம் செய்து விட்டு சென்ற நிலையில், இன்று என்ன நடக்க உள்ளது என்பதை பார்ப்போம்.
25
Mayilvaganam and Parameshwari Phone Talk:
போனில் பாட்டியுடன் பேசும் மயில்வாகனம்
அதாவது, மயில்வாகனம் பரமேஸ்வரி பாட்டியை விசாரிக்க போன் போட்ட போது, பாட்டி என்னுடைய பேரனுக்கும் - பேத்திக்கும் விருந்து வைக்கவேண்டும் என ஆசையாக உள்ளது என மனதில் பட்டத்தை சொல்ல, மயில்வாகனம் அவ்வளவு தானே பாட்டி நீங்க கவலை படாதீங்க அவங்க 2 பேரையும் நான் அங்க அத்தை சம்மதத்தோடு அனுப்பி வைக்கிறேன் என நம்பிக்கை கொடுக்கிறான்.
மயில்வாகனம் இதுபற்றி, ராஜராஜனிடம் சொல்ல இருவரும் ட்ராமா ஒன்றை போட முடிவு செய்கிறார்கள். அதன்படி, சாமுண்டீஸ்வரி நான் கார்திக்கையும் - ரேவதியையும் அவங்க வீட்டிற்கு விருந்துக்கு அனுப்பி வைக்கிறேன். அவங்க பொறாமையில் பொசுங்கட்டும் என புது பாட்டியை பழி வாங்கவே அனுப்புவது போல சொல்கிறாள்.
45
Parameshwari Hide Family Photo:
போட்டோவை மறைத்து வைக்கும் பாட்டி:
பாட்டி வீட்டில் விருந்து என்றதும், ரேவதி சந்தோஷமாக சம்மதம் சொல்கிறாள். இதை தொடர்ந்து கார்த்திக் ரேவதி இருவரும் பைக்கில் ஒன்றாக சொல்லும் போது, கார்த்திக் ரேவதியை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறான். மறுபக்கம் பாட்டி, பேரனும் - பேத்தியும் விருந்துக்கு வருவதால்... தடபுடலாக ஏற்பாடு செய்கிறார். கார்த்திக் தன்னுடைய பேரன் என்பது ரேவதிக்கு தெரிந்துவிட கூடாது என்பதால், தாத்தா பாட்டியுடன் கார்த்திக் எடுத்து கொண்ட புகைப்படத்தை பரமேஸ்வரி பாட்டி மறைத்து வைக்கிறார்.
பாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார்கள்:
இருவரும் விருந்துக்கு வந்தவுடன், அவர்களை ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் பரமேஸ்வரி பாட்டி அழைப்பதோடு, தன்னுடைய பேத்தி கையால் பூஜையில் விளக்கேற்ற சொல்கிறார். பின்னர் இருவரும் பாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார்கள். இப்படியான நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்பது நாளைய தினம் தெரியவரும்.