'கார்த்திகை தீபம்' சீரியலின் நேற்றைய எபிசோடில் மாயா, சந்திரகலா மற்றும் சிவனாண்டி என மூவரும் சந்தித்து பேசிக்கொண்ட நிலையில் இன்று என்ன நடக்க போகிறது என்பதை பார்ப்போம்.
திருமண மண்டபத்தில் இருந்து காணாமல் போன மகேஷ் பற்றி எந்த ஒரு துப்பும் கிடைக்காத நிலையில், இதுகுறித்து மாயா மூலம் போலீசில் புகார் கொடுக்க சொல்லி அனுப்பி வைக்கிறான் சிவனாண்டி. அதன் பிறகு சந்திரகலாவிடம், இந்த மாதிரி ஒரு ஆள் தான் நமக்கு வேண்டும். நாம செய்ய நினைப்பதை... யாருக்கும் எந்த சந்தேகமும் வராமல் இவங்களை வைத்தே சாதித்து விடலாம். அப்போது தான் நம் மீது யாருக்கும் சந்தேகம் வராது என தந்திரமாக கூறுகிறான்.
24
Samundeeshwari Talk about Karthik Mother
கோயிலுக்கு போய் உள்ளதாக கூறி சமாளிக்கும் கார்த்திக்
இதையடுத்து சாமுண்டீஸ்வரி, கார்த்தியிடம் உங்க கல்யாணத்துக்கு கூட உங்க அம்மா வரவே இல்ல. அவங்க வீட்டுல தானே இருக்காங்க என கேட்க, கார்த்திக் இல்ல அம்மா கோவிலுக்கு போயிருக்காங்க என சொல்லி சமாளிக்கிறான். எப்போதும் உங்க அம்மா கோவிலில் தான் இருப்பாங்களா? என கேட்க... ஆமாம் அவங்களுக்கு கொஞ்சம் பக்தி அதிகம் என கூறுகிறான்.
கார்த்திக்கின் அம்மாவிடம் சாமுண்டீஸ்வரி பேச வேண்டும் என கூற... அவனும் போன் போட்டு கொடுக்கிறான். சாமுண்டீஸ்வரி மிகவும் உரிமையாக சம்மந்தி கல்யாணம் ஆகி நீங்க ஏன் இன்னும் இங்க வரவே இல்லை.. உங்க பையனையும் பொண்ணையும் நீங்க வந்து ஆசீர்வதிக்க வேண்டும் என சொல்லியதோடு, நீங்கள் வீட்டில் எப்போது இருப்பீங்க. நானே ரெண்டு பேரையும் அங்கே கூட்டிக்கொண்டு வருகிறேன் என சொல்கிறாள்.
44
Abirami and Samundeeshwari Conversation:
சாமுண்டீஸ்வரிவீட்டுக்கு வருகை தர உள்ள அபிராமி
இதனால் ஒரு நிமிடம் பதறி போகும் அபிராமி... ஐயோ வேண்டாம் சம்மந்தி நானே அங்கு வந்து பிள்ளைகளை பார்க்கிறேன் என சொல்கிறாள். பின்னர் ஒருவித பதற்றத்துடனே இருக்கும் அபிராமி கடவுளே நான் அங்க போனால் எந்த பிரச்சனையும் வந்து விட கூடாது என மனதிற்குள் வேண்டி கொள்கிறாள். இப்படியான நிலையில், அபிராமி வருகையால் கார்த்தி பற்றிய உண்மை வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பரபரப்பான கதைக்களத்தில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றி பொறுத்திருந்து பார்ப்போம்.