அரசியின் படிப்பை பற்றி சிந்திக்கும் ராஜீ - மீனா:
இதைத் தொடர்ந்து திருமண நிச்சய பத்திரிக்கை வாசித்து திருமண நிச்சயதார்த்தமும் சிறப்பாக நடந்தது. பின்னர் ஏன் இவ்வளவு அவசர அவசரமாக நிச்சயதார்த்தம் செய்து, திருமணத்திற்கு தேதியும் குறிச்சாங்க என்று பாண்டியனின் மருமகள்கள் எல்லாம் பேசிக் கொள்கிறார்கள். அதோடு மாப்பிள்ளையின் நம்பர் வாங்கி ஏதாவது பண்ண முடியுமா என்று பார்ப்போம் என்று பேசிய நிலையில், அரசியின் படிப்பு ரொம்பவே முக்கியம். அதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். அதற்கு நம்பர் எப்படி வாங்குவது, யாரிடம் கேட்பது என்று பேசிக் கொண்டே கதிர் தான் சரியான ஆளு. அவர் வாங்கி கொடுத்துவிடுவார் என்று ராஜீ சொல்வதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய 448ஆவது எபிசோடு முடிகிறது.