பழனிக்கு தெரியவந்த உண்மை:
ஆனால், அதற்கு முன்னதாக சுகன்யா, வேண்டுமென்றே செய்திருக்கமாட்டார். அவரை தப்பு சொல்லவே உன்மீது பழி போட்டுவிட்டார். அவ்வளவு தான் என்று பழனிவேல் தனது மனைவி சுகன்யாவைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போதே இல்ல சித்தப்பா என்று மீனா பேச ஆரம்பிக்கிறார்.
அதுமட்டுமின்றி அரசி மற்றும் குமரவேல் இருவரையும் சேர்த்து வைக்க அவர் திட்டம் போடுகிறார் என்று சுகன்யாவைப் பற்றிய எல்லா விஷயத்தையும் மீனா தெளிவாக கூறுகிறார். இதனால் ஆத்திரமடைந்த பழனிவேல், தனது மனைவியை கன்னத்தில் அறைந்து அவரது கழுத்தை பிடிக்கிறார். இதற்கு அசராத சுகன்யா, மீனா மற்றும் பழனிவேல் இருவரையும் ஒன்றாக சேர்த்து வைத்து பேசுகிறார்.