திரைப்படங்களுக்கு நிகராக, சீரியல்கள் அதிகம் ரசித்து பார்க்கப்பட்டு வருகிறது. சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு அடுத்தபடியாக, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தான் அதிக சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
டான்ஸ் ஜோடி டான்ஸ்:
சீரியல் மட்டும் அல்ல... ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சியில்.. பஞ்சமி என்கிற கிராமத்து பெண்ணின் நடனம் பலரது பாராட்டுகளையும் குவித்து வருகிறது.
ஜீ தமிழ் மூலம் வெளிப்பட்ட எளிய பெண்ணின் திறமை
உண்மையான திறமைக்கு வறுமையோ அல்லது 3 குழந்தைகளுக்கு தாய் என்பதோ எந்த விதத்திலும் தடையாக இருக்காது என்பதை பஞ்சமி ஒவ்வொரு எபிசோடிலும் நிரூபித்து வருகிறார். இவருக்கு இந்த நிகழ்ச்சியின் நடுவர் வரலட்சுமி தன்னுடைய வீட்டிற்கு அழைத்து, சென்று உபசரித்தார்.
டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி:
சரத்குமார் தோசை சுட்டு கொடுத்து உபசரித்தது மட்டும் இன்றி, பஞ்சமியில் குழந்தைகள் படிப்புக்காக 1 லட்சம் நிதி உதவி கொடுத்தார். அதே போல் இந்த வாரம் நடந்த டான்ஸ் நிகழ்ச்சியில்... 'ரோஜா' சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி தனக்கு ஜீ தமிழ் கொடுத்த 'பேஸ் ஆப் தமிழ்நாடு' என்கிற விருதை அந்த பெண்ணிற்கு கொடுத்தார்.
நெட்டிசன்கள் கருத்து
இப்படி ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பாமர மக்களை பெருமை படுத்தி வரும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில்... சமீபத்தில் துவங்கப்பட்ட சீரியல் தான் 'கெட்டி மேளம்'. இந்த சீரியலின் கதை களத்தை லைட்டாக பட்டி டிங்கரிங் பார்த்து விஜய் டிவி புதிய சீரியலை உருவாக்கி உள்ளதாக நெட்டிசன்கள் புரோமோவை பார்த்து கிழித்து தொங்க விட்டு வருகிறார்கள்.
'தனம்' சீரியல்:
சமீபத்தில் விஜய் டிவியில் தொடங்கிய 'தனம்' சீரியல் ZEE தமிழில் ஒளிபரப்பாகி வரும் வீரா சீரியலின் காபி தான்.. அங்கு அண்ணன் ஆட்டோ ட்ரைவர், இங்கே கணவர் ஆட்டோ ட்ரைவர் அவ்வளவு தன வித்தியாசனம் என கலாய்த்து எடுத்தனர்.
பூங்காற்று திரும்புமா Vs கெட்டி மேளம்
இந்த நிலையில் தற்போது 'பூங்காற்று திரும்புமா' என்ற புத்தம் புதிய சீரியல் விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், இது ZEE தமிழின் கெட்டிமேளம் சீரியலை போலவே இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்த கமெண்ட்ஸ் தான் இப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.