பாண்டியன் ஸ்டோரிஸ் 2 சீரியலில் இன்றைய 443ஆவது எபிசோடில் சுகன்யா மற்றும் மீனா தொடர்பான காட்சிகளும், முத்துவேல் மற்றும் குமாரவேல் தொடர்பான காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.
மீனாவுக்கு ஆதரவாக பேசும் பழனிவேல்:
சரி, மீனா வந்ததும் கண்டிப்பதாக பாண்டியன் கூறியிருக்கிறார். இதே போன்று பழனிவேலுவிடமும் சொல்லவே, அதற்கு அவர் மீனா அப்படியெல்லாம் பேசாதே, நீ தான் ஏதோ தப்பா பேசியிருக்கிற, இப்போ கூட பொய் சொல்ற என்பது போன்று பழனிவேல் பேசியிருக்கிறார். அதற்கு சுகன்யா மீனா மற்றும் பழனிவேல் உறவு முறையை தவறாக பேசுகிறார்.
மீனாவை கண்டிக்கும் பாண்டியன்:
கடைசியாக சுகன்யா தன்னை திட்டிய மீனாவை நீங்கள் சத்தம் போடுவதாக சொன்னீங்க, ஆனால் எதுவும் கேட்கவில்லை என்று பாண்டியனிடம் கூறவே, அதற்கு கோமதி மீனாவை அழைத்து, ஏன் சுகன்யாவை தப்பாக பேசுன, அவள் உனக்கு வயதில் மூத்தவர், அப்படியெல்லாம் பேசக் கூடாது என்று கண்டிக்கிறார்.
எல்லா பிரச்சனைக்கும் கரணம் சுகன்யா என்பதை புரிந்து கொள்ளும் மீனா:
அப்போது செந்தில் அங்கு வருகிறார். அதோடு இன்றைய 443ஆவது எபிசோடு முடிவடைகிறது. சுகன்யா தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்பதை மீனா தெளிவாக புரிந்து கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி இப்போது வீட்டில் கேம் ஆடுகிறார் என்பதையும் மீனா மற்றும் செந்தில் இருவரும் புரிந்து கொண்டுள்ளனர். இனி என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Pandian Stores: மயங்கி விழுந்த அரசி; பாண்டியன் எடுத்த முடிவால் நிம்மதியில் தங்கமயில்!