anna serial
ரத்னாவை பழிவாங்கும் நோக்கத்தில், வெங்கடேஷ் திருமணம் செய்து அவளை அடித்து கொடுமை படுத்திய நிலையில், ரத்னா அவனோடு வாழ முடியாது என முடிவெடுத்து தன்னுடைய அண்ணன் வீட்டுக்கே வந்த கதை அனைவரும் அறிந்ததே. கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில், ரத்னாவை வெங்கடேஷை விட்டு நிரந்தரமாக பிரித்து விடும் நோக்கத்தில், பஞ்சாயத்து கூடுகிறது.
தாலியை கழட்டி எரியும் ரத்னா
அதில் ரத்னா வெங்கடேஷின் அயோக்கிய தனத்தையெல்லாம் சொல்லி, அவனிடம் இருந்து விடுதலை வேண்டும் என்று கேட்கிறாள். அதே போல் உனக்கும் எனக்கும், இடையே இந்த தாலி தான் ஒரு பந்தத்தை ஏற்படுத்துகிறது என்றால், இந்த தாலியே எனக்கு தேவையில்லை என அவன் முகத்தில், தாலியை கழட்டி வீசி எறிகிறாள், வெங்கடேஷ் அனைவர் மும்பும் வெக்கி தலைகுனிந்து நிற்கிறான்.
Anna serial: தாலியை கழட்டி தூக்கி எறிந்த ரத்னா; வெளுத்து வாங்கிய சண்முகம்!
தங்கைக்கு துணையாக நிற்கும் சண்முகம்
சண்முகம் தன்னுடைய தங்கை ரத்னா முடிவுக்கு முழு ஆதரவு தெரிவிக்கும் நிலையில், அவளை தனது வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். மற்றொருபுறம் இசக்கி மற்றும் வீரா இருவரும் கோவிலில் அக்கா ரத்னாவுக்கு எப்படியும் நல்ல தீர்ப்பு கொடுத்திருக்கணும் என்று சாமியிடம் வேண்டுகிறார்கள். அக்கா வந்ததும் அவளுக்கு திருஷ்டி சுத்தி போட்டு தான் வீட்டுக்குள் அழைத்து செல்ல வேண்டும்.
கோவிலில் அக்காவுக்காக வேண்டி கொள்ளும் வீரா - இசக்கி
அவளோடு மனசுக்கு புடிச்ச மாதிரி இன்னொரு நல்ல வாழ்க்கை அமையனும் என பேசி கொள்கின்றனர். அடுத்து வெங்கடேஷின் அப்பா அம்மா, மகனையும் அழைத்து கொண்டு கோவிலுக்கு வர, அந்த ரத்னா வேண்டாம்னு நாங்க ஆரம்பத்திலேயே சொன்னோம்.. நீ தான் கேட்கல? ஒரு பொம்பள, உன்ன வேணான்னு போகும் போது உனக்கு என்னடா குறைச்சல், நீ வா நாங்க உனக்கு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறோம் என்று ஆறுதல் சொல்கிறார்கள்.
Anna Serial: வெங்கடேஷ் நெஞ்சில் காலை வைத்த சண்முகம்; பஞ்சாயத்தில் நடிக்க போவது என்ன?
வீராவை திருமணம் செய்து கொள்ள நினைக்கும் வெங்கடேஷ்
கோவில் குளத்தில் அவனை தலை மூழ்க சொல்ல, இதை பார்த்த இசக்கி மற்றும் வீரா என்ன எங்க அக்கா தாலியை கழட்டி மூஞ்சில் எறிந்தாளா என்று நக்கல் அடிக்க வெங்கடேஷ் இன்னும் கடுப்பாகிறான். மேல வரும் வெங்கடேஷ், உங்க அக்கா தாலியை கழட்டி போட்டா என்ன நீ இன்னும் கல்யாணம் ஆகாமல் தானே இருக்க என்று வீரா கழுத்தில் தாலி கட்ட செல்ல, இசக்கி அதிர்ச்சி அடைகிறாள். வெங்கடேஷை பிடித்து தள்ளி விடுகிறாள். ஆனால் அவன் வீரா கழுத்தில் தாலியை கட்ட அவளை துரத்தி செல்கிறான். இப்படியான நிலையில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.