பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கடந்த சில வாரங்களாக அரசியின் காதல் கதை தான் ஹாட் டாப்பிக்காக போய் கொண்டிருக்கிறது. இதில் எல்லா பிரச்சனையும் முடிந்த நிலையில் எல்லோருமே சமாதானம் ஆன நிலையில் இப்போது மீண்டும் அரசியை காலேஜூக்கு அனுப்பலாமா? வேண்டாமா என்பதோடு தொடங்கி கடைசியில் சுகன்யா நான் கூட்டிச் சென்று விட்டு விட்டு வருகிறேன் என்பதோடு முடிவடைகிறது.
அரசியை கல்லூரிக்கு அனுப்புவதில் நடக்கும் டிஸ்கஷன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 441ஆவது எபிசோடில் மீனா, மயில் மற்றும் ராஜீ ஆகிய மூவரும் அரசியை காலேஜூக்கு அனுப்புவது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு சரவணன், செந்தில் மற்றும் கதிர் மூவரும் அப்பா மற்றும் அம்மாவிடம் சம்மதம் கேட்கிறார்கள். அரசியை காலேஜூக்கு அனுப்புவதற்கு பாண்டியனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், கோமதி தான் அனுப்ப முடியாது என்றும், அவள் படித்தவரை போதும் என்றும் பிடிவாதமாக இருக்கிறார்.
Pandian Stores: சைலண்டாக மாப்பிள்ளை பார்த்து - நிச்சயதார்த்த தேதி குறித்த பாண்டியன்! அரசி சொன்ன வார்த்தை?
கல்லூரிக்கு அனுப்ப சம்மதம் கூறும் கோமதி
கடைசியில் கோமதியும் சம்மதம் தெரிவிக்க, யார் காலேஜிற்கு கூட்டிக் கொண்டு செல்வது, யார் திரும்ப அழைத்து வருவது என்று கேட்க, அதற்கு எல்லோருமே நாங்களே கூட்டிக் கொண்டு போகிறோம் . பிறகு கூட்டி வருகிறோம் என்று கூறியுள்ளனர். அடுத்த காட்சியாக குமாரவேல் அரசியிடம் பேசுவதற்கு வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார்.
அரசியிடம் பேச உதவி கேட்கும் குமரவேல்
அப்போது சுகன்யா வரவே, குமாரவேலுவிடம் சென்று உங்களது வீட்டிலும் பிரச்சனை வந்துவிடும், அரசி வீட்டிலும் பிரச்சனை வந்துவிடும் என்று கூறியுள்ளார். அதற்கு குமாரவேல் நான் அரசியிடம் பேச வேண்டும். அதற்கு நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும், நான் காலேஜூக்கு போக முடியாது, ஏனென்றால் அது பெண்கள் கல்லூரி. ஆதலால், மதிய உணவு இடைவேளையில் ஏதாவது ஒரு காரணம் சொல்லி அரசியை அழைத்து வாருங்கள் நான் பேசிக் கொள்கிறேன் என்று குமாரவேல் கேட்கிறார்.
Pandian Stores: மயங்கி விழுந்த அரசி; பாண்டியன் எடுத்த முடிவால் நிம்மதியில் தங்கமயில்!
வழிய வந்து உதவுவதாக கூறும் சுகன்யா:
அதற்கு சுகன்யாவோ, நான் அரசியை கல்லூரிக்கு கூட்டிக் கொண்டு வருகிறேன். நீ, காலேஜூக்கு வெளியில் வைத்து அவளிடம் பேசிக் கொள் என்று கூறி விட்டு வீட்டிற்கு வருகிறார். அப்போது செந்திலிடம் உங்களுக்கு கடைக்கு லேட் ஆகவில்லையா என்று கேட்டு, நான் வேண்டுமென்றால் அரசியை காலேஜூக்கு கூட்டிக் கொண்டு விட்டு விட்டு வருகிறேன். எதற்கு எல்லோரும் வேலையை விட்டு விட்டு கடைக்கும், காலேஜூக்கும் அலைய வேண்டுமா? நான், வீட்டில் சும்மா தானே இருக்கிறேன். அரசியை கல்லூரியில் கூட்டிச் சென்று விட்டு விட்டு வருகிறேன் என்று மீனாவை பார்த்தவாறே கூறுகிறார்.
சுகன்யாவை நம்புவாரா மீனா?
ஏற்கனவே மீனாவிற்கு சுகன்யா மீது ஒரு சந்தேகம் இருக்கிறது. அரசியிடம் குமாரவேல் ரொம்ப நல்லவன். அவனை திருமணம் செய்து கொள் என்று கூறும் போது மீனா கேட்டுவிட்டார். இதையடுத்து அவரை திட்டிவிட்டு அரசியை எச்சரித்தார். இப்போது குமாரவேலுவிற்காக அரசியை காலேஜூக்கு கூட்டி செல்வதாக கேட்கிறார். ஆனால், இதெல்லாம் மீனாவிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மீனா தான் அரசியை காலேஜூக்கு அனுப்புவதற்கு அனுமதி பெற்றுக் கொடுத்தார். ஆதலால், சுகன்யாவை நம்பி அரசியை அவருடன் மீனா அனுப்பி வைக்க சம்மதிக்கமாட்டார் என்று தெரிகிறது. சரி நாளைய 442ஆவது எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Pandian Stores: அரசி விசயத்தில் முக்கிய முடிவு எடுத்த பாண்டியன் எடுத்த முடிவு! கோமதியின் ரியாக்சன் என்ன?